கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீக்கப்பட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பணியாளர்களுக்கு உத்தரவு

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021
Share
Advertisement
மதுரை : பணி நீக்கம் செய்யப்பட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பணியாளர்களை எதிர்காலத்தில் இதுபோன்ற புது திட்டப் பணியில் ஈடுபடுத்த பரிசீலிக்க வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை தல்லாகுளம் தங்கப்பாண்டி உட்பட சிலர் தாக்கல் செய்த மனு:மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நீர்வடிப்பகுதி மேம்பாடு திட்டம்
  நீக்கப்பட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பணியாளர்களுக்கு  உத்தரவு

மதுரை : பணி நீக்கம் செய்யப்பட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பணியாளர்களை எதிர்காலத்தில் இதுபோன்ற புது திட்டப் பணியில் ஈடுபடுத்த பரிசீலிக்க வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை தல்லாகுளம் தங்கப்பாண்டி உட்பட சிலர் தாக்கல் செய்த மனு:மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நீர்வடிப்பகுதி மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் எங்களைப்போல் பலர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இத்திட்டத்தில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் அமைத்தல், விவசாயிகளுக்கு மானிய பொருட்கள் வழங்குதல் பணி பல கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது.

எங்களை மாநில திட்ட முகமை தலைமை செயல் அலுவலர் பணி நீக்கம் செய்தார். திட்டப் பணி நிறைவடையவில்லை. நாங்கள் நடுத்தர வயதை கடந்துவிட்டோம். மாற்று வேலை தேட இயலாது. பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பணியில் தொடர அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். மனுதாரர் தரப்பு, 'முதல் 2 கட்டப் பணி முடிந்துவிட்டது. மூன்றாவது கட்ட திட்டப் பணி மார்ச்சில் நிறைவடையும். அதற்குள் திட்டத்தை கலைத்தது ஏற்புடையதல்ல. திட்டப் பணி நிறைவடையும் வரை மனுதாரர்களை தொடர அனுமதிக்க வேண்டும்,' என தெரிவித்தது.அரசுத் தரப்பு, 'மனுதாரர்கள் தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் எவ்வித உரிமையும் கோர முடியாது,' என தெரிவித்தது.நீதிபதி: மனுதாரர்கள் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ளனர். அவர்கள் 40 முதல் 45 வயதை கடந்துள்ளனர்.திட்டப் பணியில் அவர்களுக்கு நல்ல முன் அனுபவம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. புதிய திட்டப் பணியில் மனுதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.மனுதாரர்கள் பட்டயம், பி.இ.,பொறியியல் பட்டம் படித்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற புது திட்டப் பணியில் ஈடுபடுத்த மனுதாரர்களைபரிசீலிக்க வேண்டும். இதனால் திட்டத்தின் பலன்கள் பயனாளிகளுக்கு சென்றடைய உதவியாக இருக்கும். நேரடி நியமனத்தில் மனுதாரர்கள் பங்கேற்க வயது தளர்வு அளிக்க பரிசீலிக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X