அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் ஆதரவாளர்களை இன்று சந்திக்கிறார் அழகிரி..

Added : ஜன 03, 2021
Share
Advertisement
மதுரை : தனது தந்தை கருணாநிதி பெயரில் புதிய கட்சி துவங்குவது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களை தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மதுரையில் இன்று (ஜன.,3) சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். தி.மு.க., தலைவராக கருணாநிதி இருந்த போது நடந்த லோக்சபா, சட்டசபை மற்றும் இடைத்தேர்தல்களில் தென் மாவட்டங்களில் தி.மு.க., வெற்றிக்கு உழைத்தவர்அழகிரி. இவரின் 'திருமங்கலம்

மதுரை : தனது தந்தை கருணாநிதி பெயரில் புதிய கட்சி துவங்குவது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களை தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மதுரையில் இன்று (ஜன.,3) சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

தி.மு.க., தலைவராக கருணாநிதி இருந்த போது நடந்த லோக்சபா, சட்டசபை மற்றும் இடைத்தேர்தல்களில் தென் மாவட்டங்களில் தி.மு.க., வெற்றிக்கு உழைத்தவர்அழகிரி. இவரின் 'திருமங்கலம் பார்முலா' தேசிய கட்சிகளையும் திரும்பிப் பார்க்க செய்தன. கட்சிக்குள் எழுந்த ஸ்டாலினா, அழகிரியா என்ற போட்டியின் தொடர்ச்சியாக சில காரணங்களுக்காக அழகிரி நீக்கப்பட்டார்.அதையடுத்து தி.மு.க., சந்தித்த பல தேர்தல்களில் தென் மாவட்டங்களில் போதிய வெற்றியை பெறமுடியவில்லை.

கருணாநிதி மறைவிற்கு பின் மீண்டும் கட்சிக்குள் சேர்க்க அழகிரி எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஸ்டாலின் குடும்பத்தினர் அழகிரியை சேர்க்க முட்டுக்கட்டை போடுகின்றனர்.இந்நிலையில் தன்னை நம்பி வந்த ஆதரவாளர்களின் எதிர்காலம் கருதி புதிய கட்சியை துவங்கும் மனநிலைக்கு அழகிரி வந்துள்ளார். இதன் துவக்கமாக மாவட்டம் வாரியாக ஆதரவாளர்களை இன்று சந்தித்து ஆலோசனைகளை கேட்கிறார்.இதுகுறித்து அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது:கொரோனா காரணமாக குறிப்பிட்டோருக்கு மட்டும் அழைப்பு விடுத்தோம்.

ஆனால் ஆர்வம் மற்றும் கட்சிக்குள் ஸ்டாலின், உதயநிதி ஆதிக்கத்தால் மனம் வெதும்பிக் கிடப்போர் என ஆயிரக்கணக்கானோர் வருகை தரவுள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் அதற்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு ஒருவர் பேச அனுமதிக்கப் படுவர். ரஜினி கட்சி துவங்கவில்லை என தெரிய வந்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இறுதியில் அழகிரி பேசுவார் என்றனர்.

கருணாநிதி ஆதரவாளரிடம் நியாயம் கேட்க அழகிரி முடிவுதி.மு.க.,வில் கருணாநிதி ஆதரவாளர்கள் தான் பெரும்பாலும் உள்ளனர். ஸ்டாலினுக்கு என தனிக் கூட்டம் இல்லை. அழகிரி புதிய கட்சி துவங்கி அதனால் தி.மு.க., வெற்றி பாதித்தால் அவரது ஆதரவாளர்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக கட்சியில் சேர்ப்பது குறித்து இக்கூட்டத்தில் ஸ்டாலினுக்கு அழகிரி இறுதி எச்சரிக்கை விடுக்க வாய்ப்புள்ளது.

இதன் மூலம் தி.மு.க., தோல்வியுற்றால் நான் பொறுப்பல்ல, பிடிவாதமாக செயல்பட்ட ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் தான் காரணம் என கருணாநிதி ஆதரவாளர்களுக்கு புரிய வைக்கும் வகையில் இக்கூட்டத்தில் அழகிரி உருக்கமாக சில விஷயங்களை பேச வாய்ப்புள்ளது. ரஜினி அரசியலுக்கு வராத நிலையில் ஆதரவாளர்களின் எதிர்காலம் கருதி புதிய கட்சி துவங்கி பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது தொடர்பாகவும் விவாதம் நடக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X