பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் கோலப்போட்டியில் தெருவே விழாக்கோலம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் தினமலர், ஸ்ரீஜெயபிரபா ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் தனக்கன்குளம் நேதாஜிநகர் சிவாங்கா அவென்யூ வசந்தம் வில்லாஸ் மற்றும் பைபாஸ் ரோடு பொற்குடம் அபார்ட்மென்ட்டில் கோலப்போட்டி திருவிழா நடந்தது. வசந்தம் வில்லாஸில் நடந்த கோலப் போட்டிக்கான ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் வைரமணி, அசோக்குமார், பொன் கார்த்திகேயன், கணேஷ், ரமேஷ்குமார்

மதுரை : மதுரையில் தினமலர், ஸ்ரீஜெயபிரபா ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் தனக்கன்குளம் நேதாஜிநகர் சிவாங்கா அவென்யூ வசந்தம் வில்லாஸ் மற்றும் பைபாஸ் ரோடு பொற்குடம் அபார்ட்மென்ட்டில் கோலப்போட்டி திருவிழா நடந்தது.

வசந்தம் வில்லாஸில் நடந்த கோலப் போட்டிக்கான ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் வைரமணி, அசோக்குமார், பொன் கார்த்திகேயன், கணேஷ், ரமேஷ்குமார் ஆகியோர் செய்தனர். தெருவே விழாக்கோலம் பூண்டது போல களைகட்டிய குடியிருப்பில் பெண்கள்
விதவிதமான வடிவங்களை வரைந்தனர். அதில் யானை, வாத்து, மயில்களும், ரோஜாக்கூட்டங்களும் அதிகம் இடம்பெற்றன. கலையுணர்வை ஏற்படுத்தும் வகையில் மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி செடிக்கு சிறுமி நீருற்றும் வகையில் ரங்கோலி வரைந்த மகேஸ்வரிக்கு மில்கா வொண்டர் கேக்கின் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.


தாமரையும், ரோஜாவும் வண்ணங்களால் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து அழகுசேர்த்த அனு சக்திவேலனுக்கு முதல்பரிசு வழங்கப்பட்டது. பாரம்பரிய பட்டுச்சேலையில் அழகுமிளிர வீற்றிருக்கும் பெண் ரங்கோலி வரைந்த வித்யா 2ம் பரிசு, சங்கும் பூக்களுமாக ரங்கோலி வரைந்த அமுதா 3ம் பரிசு பெற்றனர். பைபாஸ் ரோடு பொற்குடம் அபார்ட்மென்டில் நடந்த கோலப்போட்டியில் நலச்சங்க தலைவர் ஜெயக்குமார், செயலாளர் ஜூலியன், பொருளாளர் சிவப்பிரகாசம், நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், நாராயணன், உதயகுமார் ஏற்பாடுகளை
செய்தனர். மயக்கும் மஞ்சள் பின்னணியில் வண்ணங்களை குழைத்து பூக்களாக மாற்றி
பிரமிக்க வைத்த உமாவிற்கு முதல் பரிசு கிடைத்தது.

அழகுமயிலை இன்னும் வண்ணங்களால் அழகுபடுத்தியதற்காக ஆகாங்ஷா 2ம் பரிசும்,
எத்தனை விதமாக மயில் வரைந்தாலும் அழகு என்பதற்கேற்ப ருபினா சையது 3ம் பரிசு
பெற்றனர். கோலமிட்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. செந்தமிழ் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, சின்மயா மிஷன் செயற்குழு உறுப்பினர் ஆர்த்தி, நடுவர்களாக பங்கேற்றனர். திருப்பதி மசாலா அன்ட் அப்பளம், மில்கா வொண்டர் கேக், மதுரை பாண்டியன் அப்பளம், அல்ட்ரா டிஸ்கவுண்ட் மாட்டிக் லிக்விட் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.
பரிசு பெற்றவர்கள் கூறியதாவது: என்னை கவுரவப்படுத்தியது தினமலர் மகேஸ்வரி, தனியார் நிறுவனம், வசந்தம் வில்லாஸ்: மரம் வளர்ப்பதன் மூலமே பூமியில் நமக்கு அடுத்து வரும்
சந்ததியினர் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்.

ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். இதை புரிய வைக்கும் வகையில் சிறுமி செடிக்கு தண்ணீர் ஊற்றுவது போல கோலம் வரைந்தேன். சிறப்பு பரிசு கொடுத்து என்னை கவுரவப்படுத்தியது தினம லர். ஊக்கப்படுத்தியதற்கு நன்றிஅனு சக்திவேலன், குடும்பத்தலைவி, வசந்தம் வில்லாஸ்: ஏற்கனவே கோ ஆப் டெக்ஸ் காலனியில் தினமலர் நடத்திய கோலப்போட்டிகளில் 2 முறை பரிசு பெற்றுள்ளேன். இப்போது 3வது முறையாக முதல்பரிசு கிடைத்தது. தொடர்ந்து தினமலர் என்னைப் போன்ற பெண்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி வருகிறது.

உழைப்புக்கு கிடைத்த வெற்றி
உமா, குடும்பத்தலைவி, பொற்குடம்: புத்தாண்டு வண்ணமயமாக இருக்க வேண்டும் என்பதற்காக கோலத்தை சுற்றிலும் மஞ்சள் வண்ணம் தேர்வு செய்தேன். உட்பகுதியில் பூக்கள் வரைந்து அதைச் சுற்றி ஜியோமெட்ரிக் வடிவத்தில் சுருள் வடிவத்தை சுற்றிலும் வரைந்திருந்தேன். இதற்கு முதல்பரிசு கிடைத்தது, எனது உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன்.

பங்கேற்றதே பெருமை தான்
ஆகாங்ஷா, மாணவி, பொற்குடம்: அழகு வண்ண மயிலை சுற்றி வெள்ளை நிற பின்னணியை தேர்வு செய்தேன். நிறைய வண்ணங்கள் கொடுப்பதன் மூலம் மனம் புத்துணர்ச்சி பெறும். மயில் என்றாலே பார்ப்போரை கவரும். தினமலர் போட்டியில் பங்கேற்பதே பெருமையாக நினைத்திருந்தேன். 2ம் பரிசு கிடைத்தது அதை விட பெருமையாக நினைக்கிறேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X