பொது செய்தி

தமிழ்நாடு

ஓவிய, சிற்பக்கலைஞரா நீங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தலாம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
மதுரை : ''மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் நடக்கும் ஓவியம், சிற்பக்கண்காட்சியில் படைப்புகள் இடம் பெற ஓவிய, சிற்பக் கலைஞர்கள் ஜன.,5க்குள் விண்ணப்பிக்கலாம்'' என கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: நாட்டின் பாரம்பரியம், கலை, பண்பாட்டை மேம்படுத்தவும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் துறை கலை

மதுரை : ''மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் நடக்கும் ஓவியம், சிற்பக்கண்காட்சியில் படைப்புகள் இடம் பெற ஓவிய, சிற்பக் கலைஞர்கள் ஜன.,5க்குள் விண்ணப்பிக்கலாம்'' என கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: நாட்டின் பாரம்பரியம், கலை, பண்பாட்டை மேம்படுத்தவும், கலைஞர்
களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் துறை கலை பயிற்சிகள் அளித்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இம்மண்டலம் சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,
சிவகங்கை மாவட்டங்களில் ஓவிய படைப்புகளை பெற்று ஓவிய கலைகாட்சியை நடத்த
உள்ளது. கலை படைப்புகளை தேர்வு செய்ய உதவி இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த கலை படைப்புகளுக்கு ரொக்கப்பரிசுகள் உண்டு.

தங்கள் படைப்புகள் மற்றும் சுய விவரங்களை கலைஞர்கள், ஜன.,5க்குள் உதவி இயக்குனர்,
மண்டல கலை பண்பாட்டுத்துறை, பாரதி உலாதெரு, மதுரை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X