இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021
Share
இந்திய நிகழ்வுகள்முதல்வரை கொன்றால் ரூ 10 லட்சம் பரிசு: சுவரொட்டியால் பரபரப்புமொகாலி:பஞ்சாபில், 'முதல்வர் அமரீந்தர் சிங்கை கொலை செய்பவருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்ற சுவரொட்டி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்து கடவுள் அவமதிப்பு பேச்சாளர் கைதுஇந்துார்:மத்திய பிரதேசத்தில், ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்திய, நகைச்சுவை பேச்சாளர் உட்பட, ஐந்து


இந்திய நிகழ்வுகள்

முதல்வரை கொன்றால் ரூ 10 லட்சம் பரிசு: சுவரொட்டியால் பரபரப்பு

மொகாலி:பஞ்சாபில், 'முதல்வர் அமரீந்தர் சிங்கை கொலை செய்பவருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்ற சுவரொட்டி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil newsஇந்து கடவுள் அவமதிப்பு பேச்சாளர் கைது

இந்துார்:மத்திய பிரதேசத்தில், ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்திய, நகைச்சுவை பேச்சாளர் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை தாக்குதல் பயங்கரவாதி கைது

புதுடில்லி:மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி ஜகியுர் ரகுமான் லக்வியை, பாக்., போலீசார், கைது செய்தனர்.

கடந்த, 2008ல், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சதிக்கு மூளையாக செயல்பட்ட, லஷ்கர் பயங்கரவாதி ஜகியுர் ரகுமான் லக்வி, விசாரணை கைதியாக, பாகிஸ்தானில் ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்த பின், 2015ல் விடுதலை செய்யப்பட்டான். அவனை, சர்வதேச பயங்கரவாதி என, ஐ.நா., அறிவித்துள்ளது.latest tamil news
தமிழக நிகழ்வுகள்

மாடுகளை திரிய விட்டவர் மீது வழக்கு

காரைக்கால்: காரைக்காலில் பொதுமக்களுக்கு இடையூராக மாட்டை சாலையில் திரிய விட்ட நபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி

திருவொற்றியூர் : மின்சாரம் பாய்ந்து, மின் ஊழியர் பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.

ரூ.45 கோடி மோசடி மேலும் ஒருவர் கைது

சென்னை : கடன் வாங்கி தருவதாக, 45 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஹான்ஸ் விற்ற இருவர் கைது

விழுப்புரம்: தும்பூர் கிராமத்தில் உள்ள பெட்டி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக புகார்கள் வந்தன.அதன்பேரில் கெடார் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார், நேற்று தும்பூர் கிராமத்தில் உள்ள பெட்டிகடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அதில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த கணேசன்,52; சந்திரசேகர்,50; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 340 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் 48 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை : துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட, 48.27 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மின்சாரம் தாக்கி பசு பலி

வானுார்: மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழந்தது.கிளியனுார் அடுத்த ஒழிந்தியாப்பட்டு கிரா மத்தை சேர்ந்தவர் கண்ணாயிரம் மகள் அனிதா, 25; இவருக்கு, சொந்தமான பசுமாடு நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது.அப்போது, அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கிய பசுமாடு, மின்சாரம் தாக்கி இறந்தது. அனிதா கொடுத்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்: 100 மீது வழக்கு

விழுப்புரம்: ஆரோவில் பகுதியில் சமூக இடைவெளியின்றி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இரு விபத்துகளில் இருவர் பலி

திருவாடானை : திருவாடானை அருகே சிவிலியேந்தலைசேர்ந்தவர் முத்தாயி 70. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சின்னக்கீரமங்கலம் சாலையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அதே இடத்தில் பலியானார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X