சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மல்லிகை விவசாயிகள் கவலை

Added : ஜன 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, நிலையூர், சம்பக்குளம், தோப்பூர், வலையங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. பனி காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: தற்போது அதிகம் பனி விழுவதால் மல்லிகை பூ விளைச்சல் இல்லை. பொதுவாக கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் விளைச்சல் குறையும். இந்தாண்டு பெரும்பாலான

திருப்பரங்குன்றம் : வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, நிலையூர், சம்பக்குளம், தோப்பூர், வலையங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. பனி காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: தற்போது அதிகம் பனி விழுவதால் மல்லிகை பூ விளைச்சல் இல்லை. பொதுவாக கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் விளைச்சல் குறையும்.

இந்தாண்டு பெரும்பாலான நிலங்களில் விளைச்சல் முற்றிலும் முடங்கி விட்டது. ஒரு சிலருக்கு ஏக்கருக்கு 200 கிராம்கூட கிடைக்கவில்லை. தற்போது கிலோ ரூ. 3500 வரை விலை போகிறது. ஆனால் விளைச்சல் இல்லை. மற்ற மாதங்களில் ஏக்கருக்கு 70 - 100 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். அப்போது விலை குறைந்துவிடும். பூ சாகுபடியை மட்டுமே நம்பியுள்ள எங்களை போன்ற விவசாயிகள் 3 மாதங்கள் வருமானமின்றி தவிக்கிறோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
03-ஜன-202110:50:22 IST Report Abuse
Loganathan Kuttuva மல்லிகை பூக்கள் அதிகம் கிடைக்கும் சமயங்களில் ஏற்றுமதி செய்வது அதிகரிக்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X