ஆண்டிபட்டி : மூல வைகைஆற்றின் நீர் வரத்தால் மரிக்குண்டு பொம்மையசாமி கண்மாய் நிரம்பி உள்ளது
.
வருஷநாடு மலைப்பகுதியில் இருந்து வரும் மூலவைகை ஆற்றில் துரைச்சாமிபுரம் அருகே தடுப்பணை மற்றும் கால்வாய் அமைத்து மரிக்குண்டு பொம்மையசாமி, கோடாங்கிநாயக்கர், பாலசமுத்திரம், ரெங்கசமுத்திரம் கண்மாய்களுக்கு பாசனத்திற்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. கால்வாய் வழியாக வரும் நீர் நான்கு கண்மாய்களுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது. சில வாரங்களாக கால்வாயில் சென்ற நீரால் பொம்மையசாமி கண்மாய் நிரம்பி உள்ளது. இதனால் எம்.சுப்புலாபுரம், பந்துவார்பட்டி, பாலசமுத்திரம், முத்துரெங்காபுரம், பழனித்தேவன்பட்டி ஆகிய கிராமங்களில் பாசன கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE