பா.ஜ.,வின் தடுப்பு மருந்து அகிலேஷ் பேச்சால் சர்ச்சை

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
லக்னோ:''பா.ஜ.,வின் தடுப்பூசியை, என்னால் செலுத்திக் கொள்ள முடியாது,'' என, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தெரிவித்தார்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாடு முழுதும், கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை வினியோகிக்கும் செயல்முறையின் ஒத்திகை பயிற்சி, துவங்கியது. இந்நிலையில், உ.பி., மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சிகளில்

லக்னோ:''பா.ஜ.,வின் தடுப்பூசியை, என்னால் செலுத்திக் கொள்ள முடியாது,'' என, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தெரிவித்தார்.



latest tamil news




உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாடு முழுதும், கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை வினியோகிக்கும் செயல்முறையின் ஒத்திகை பயிற்சி, துவங்கியது. இந்நிலையில், உ.பி., மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான, சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தடுப்பூசியின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பும் வகையில், கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அகிலேஷ் யாதவ் கூறுகையில், ''கொரோனா வைரசை தடுக்க, பா.ஜ.,வால் உபயோகிக்கப்பட உள்ள தடுப்பு மருந்தை, நான் எப்படி நம்புவேன். பா.ஜ.,வின் தடுப்பூசியை என்னால் செலுத்திக்கொள்ள இயலாது,'' என்றார்.அகிலேஷ் யாதவின் இந்த கருத்துக்கு, பலரும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.


latest tamil news




மாநில துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான கேசவ் பிரசாத் மவுரியா கூறியதாவது: கொரோனாவுக்காக உருவாக்கப் பட்டுள்ள தடுப்பூசி மீது, அகிலேஷ் யாதவுக்கு நம்பிக்கை இல்லை. அதேபோல், அகிலேஷ் யாதவ் மீது, உத்தர பிரதேச மாநில மக்களுக்கும் நம்பிக்கை இல்லை. தடுப்பூசி குறித்து கேள்விகளை எழுப்பி, நாட்டில் உள்ள டாக்டர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அவர் அவமதித்துவிட்டார். அதற்கு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
03-ஜன-202112:27:25 IST Report Abuse
Ramesh Sargam அகிலேஷ் போன்ற அரசியல்வாதிகளுக்கு, வைரஸ் தடுப்பு ஊசி போடுவதற்கு முன்பு, அவர்கள் வாயை மூட ஏதாவது ஒரு ஊசி போடவேண்டும்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
03-ஜன-202112:26:32 IST Report Abuse
Suppan விஷமத்தனமான பேச்சு. மோதி எதிர்ப்பு ஒன்றுதான் குறிக்கோள். இந்த மாதிரியான கீழ்த்தரமான ஆட்கள் அரசியலில் இருக்கிறார்களே என்று வேதனையாக இருக்கிறது. இந்த மாதிரியான பேச்சு சுதந்திரம் தேவையா?
Rate this:
Cancel
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
03-ஜன-202112:23:02 IST Report Abuse
Velumani K. Sundaram அறிவுக்கும் அகிலேஷுக்கும் தூரம் அதிகம். இவன் பேச்சை கேட்பதைவிட கொரோனவே மேல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X