பொது செய்தி

தமிழ்நாடு

சுண்ணாம்பு கல் வியாபாரம் மந்தம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
பெரியகுளம் : பெரியகுளம் தாலுகாவில் சுண்ணாம்புக்கான தேவை குறைந்து வருகிறது. பொங்கல் பண்டிகைவர உள்ள நிலையில் காளவாசல்களில் ஆர்டர் இல்லாததால் சுண்ணாம்புக்கல் வியாபாரம் மந்தமாக உள்ளது.இப்பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கு 20 நாட்களுக்கு முன்னரேகாளவாசலில் சுண்ணாம்பு கல் விற்பனை களை கட்டும். அதைப்பயன்படுத்தி பெரும்பாலான வீடுகளில் சுண்ணாம்பில் கலர் அடிப்பது அதிகம்.

பெரியகுளம் : பெரியகுளம் தாலுகாவில் சுண்ணாம்புக்கான தேவை குறைந்து வருகிறது. பொங்கல் பண்டிகைவர உள்ள நிலையில் காளவாசல்களில் ஆர்டர் இல்லாததால் சுண்ணாம்புக்கல் வியாபாரம் மந்தமாக உள்ளது.

இப்பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கு 20 நாட்களுக்கு முன்னரேகாளவாசலில் சுண்ணாம்பு கல் விற்பனை களை கட்டும். அதைப்பயன்படுத்தி பெரும்பாலான வீடுகளில் சுண்ணாம்பில் கலர் அடிப்பது அதிகம். தற்போது கட்டுமானத்தொழில் நவீனமாகிபோனதால் பெயின்ட், டிஸ்டம்பர் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சுண்ணாம்புக்கான தேவை குறைந்து
விட்டது. பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுண்ணாம்பு காளவாசல்கள் உள்ளன. இவர்களுக்கு இந்த மாதம் சீசன் ஆகும். ஆனால் எதிர்பார்த்தபடி ஆர்டர் வரவில்லை.

சுண்ணாம்பு உற்பத்தியாளர் கனகராஜ் கூறியதாவது:தைப்பொங்கலையொட்டி பெயின்ட்
அடிப்பது அதிகரித்தாலும் வீட்டின் ஏதாவது ஒரு சுவருக்கு சுண்ணாம்பு பூசுவது இயல்பாக
உள்ளது. இவர்களால் தான் எங்களது தொழில் பலப்பட்டு உள்ளது. சுண்ணாம்புக்கல்

வியாபாரம் குறைந்து படி ரூ.40க்கு விற்கப்படுகிறது. இதனால் இக்காளவாசல் உரிமையாளர்கள் சிலர் செங்கல் காளவாசல் மாற்று தொழிலுக்கு மாறியுள்ளனர்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X