பொது செய்தி

தமிழ்நாடு

இயக்கலாமே! கொரோனாவால் முடக்கப்பட்ட கிராம பஸ்கள் ...போக்குவரத்துக்கு கூடுதல் செலவிடும் மக்கள்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : மாவட்டத்தில் கொரோனாவால் கிராம பகுதிகளுக்கு செல்லாத பஸ்களை தளர்வுக்கு பின்பும் இயக்காததால் மக்கள் போக்குவரத்துக்கு கூடுதல் செலவிடும் நிலை உள்ளது.இதை கருத்தில் கொண்டு அரசு பஸ்கள் இயக்கத்தை மீண்டும் இயக்க வேண்டும்.கொரோனா ஊரடங்கால் பஸ் போக்குவரத்து பல மாதங்களாக தடைப்பட்டிருந்தது. நோய் பரவல் குறைந்து வரும் சூழலில் தளர்வுகள்

ஸ்ரீவில்லிபுத்துார் : மாவட்டத்தில் கொரோனாவால் கிராம பகுதிகளுக்கு செல்லாத பஸ்களை தளர்வுக்கு பின்பும் இயக்காததால் மக்கள் போக்குவரத்துக்கு கூடுதல் செலவிடும் நிலை உள்ளது.இதை கருத்தில் கொண்டு அரசு பஸ்கள் இயக்கத்தை மீண்டும் இயக்க வேண்டும்.

கொரோனா ஊரடங்கால் பஸ் போக்குவரத்து பல மாதங்களாக தடைப்பட்டிருந்தது. நோய்
பரவல் குறைந்து வரும் சூழலில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பஸ்கள் இயக்கம் நடந்தது. ஆனாலும் முன்பு போல் முழு அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை. கிராமப்புறங்களில் இரவு 7:00 மணிக்கு மேல் இயங்கும் பஸ்கள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது. கிராம மக்கள், வியாபாரிகள் பஸ் ஸ்டாண்ட் வெளியில் நீண்ட நேரம் காத்து கிடக்கின்றனர். வேறு வழியின்றி ஆட்டோக்களில் கூடுதல் பணம் செலுத்தி பயணிக்கின்றனர்.

முழு அளவில் பஸ்கள் இயக்க அரசு அறிவித்த போதிலும் அரசு அதிகாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு ஏற்றபடி இரவு நேர கிராம பஸ்களை நிறுத்தி விடுகின்றனர். எப்போதும் போல் தங்கு தடை இன்றி முன்பு இருந்தது போல் அனைத்து அரசு, தனியார் பஸ்கள் 100 சதவீதம் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X