கார் விபத்தில் பலி 1, காயம் 5
அருப்புக்கோட்டை: இ.பி., காலனியை சேர்ந்தவர் ஓய்வு ஆசிரியர் பால்ராஜ் 59. நேற்று காலை 11:30 மணிக்கு துாத்துக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கொப்புசித்தம்பட்டி அருகில் சென்ற போது இரு கார்களும் மோதி கொண்டன. இதில் ஓய்வு ஆசிரியர் பலியானார். மற்றொரு காரில் பயணம் செய்த காயல்பட்டினத்தை சேர்ந்த அபுபக்கர், பாசில், சுலைகாபீவீ, நஜிமா உட்பட 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
கட்டடங்களுக்கு பூமி பூஜை
சிவகாசி : அனுப்பன்குளம் ஊராட்சி ரத்தினகிரி நகரில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, ராமசாமி நகரில் ரூ. 5. 25 லட்சம் மதிப்பீட்டில் நவீன சுகாதார வளாகத்துக்கு சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் கவிதா , நிர்வாகிகள் குருசாமி, சந்திரன், சரவணன் கலந்து கொண்டனர்.
மீனம்பட்டியில் கட்சியினருக்கு எம்.எல்.ஏ., இனிப்புகள் வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்துார்: கூனம்பட்டி கிராமத்தில் சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ.,சந்திரபிரபா துவக்கி வைத்தார். வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.,செயலாளர் முத்தையா மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
விருதுநகர்: கலெக்டர் கண்ணன் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அலைபேசி வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் அலுவலகம், விருதுநகர் என்ற முகவரிக்கு தபாலிலோ, நேரிலோ ஜன. 8 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம், என்றார்.
ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: ஊதிய உயர்வு, பண பலன்கள் குறித்து கேட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனமான ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ., நிறுவன செயல்பாடுகளை கண்டித்து சி.ஓ.ஐ.டி.யூ.,வின் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சுகதேவ் தலைமை வகித்தார். மதுரை மண்டல தலைவர் வேதராஜ் முன்னிலை வகித்தார். மாநில பொது செயலாளர் சிவக்குமார், தலைவர் வரதராஜன், பொருளாளர் சாமிவேல், துணை பொது செயலாளர் பிரேம்குமார் பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE