பொது செய்தி

தமிழ்நாடு

கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021
Share
Advertisement
சென்னை: 'கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன்

சென்னை: 'கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.



latest tamil news


இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நாளை கடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுதினம், 6ம் தேதிகளில், கடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யலாம்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த, 48 மணி நேரத்திற்கு, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.


latest tamil news


அதிகபட்ச வெப்பநிலை, 29 டிகிரி செல்ஷியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை, 24 டிகிரி செல்ஷியசை ஒட்டியும் இருக்கும்.கடந்த, 24 மணி நேரத்தில், துாத்துக்குடியில் அதிகபட்சமாக, ௧ செ.மீ., மழை பெய்துள்ளது.குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று, மணிக்கு, 40 முதல், 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்; மீனவர்கள் அப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லவும்.இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X