கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகம்: இஸ்ரேல் முதலிடம்

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
டெல் அவிவ் : உலகில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகத்தில் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளது.கொரோனாவுக்கு அமெரிக்காவின் பைசர், மாடர்னா, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இஸ்ரேலில் 'பைசர்' தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. இங்கு இதுவரை 10 லட்சம் பேருக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவே உலகில் அதிகம். 100ல்11.55
Israel, CoronaVirus, CovidVaccine, இஸ்ரேல், கொரோனா, தடுப்பூசி, முதலிடம்

டெல் அவிவ் : உலகில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகத்தில் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளது.


கொரோனாவுக்கு அமெரிக்காவின் பைசர், மாடர்னா, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இஸ்ரேலில் 'பைசர்' தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. இங்கு இதுவரை 10 லட்சம் பேருக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


இதுவே உலகில் அதிகம். 100ல்11.55 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் பஹ்ரைன், பிரிட்டன் உள்ளன என பிரிட்டனின் ஆய்வு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பரப்பளவு, மக்கள்தொகையில் சிறிய நாடு. ஏற்கனவே சுகாதார கட்டமைப்பு தொழில்நுட்பம் சிறப்பாக உள்ளது. அதே போல தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கையும் அதிகம்.



latest tamil news


தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு 'கிரீன் பாஸ்போர்ட்' வழங்கப்படுகிறது. இதை காண்பித்து ரெஸ்டாரன்ட், போக்குவரத்து இலவசமாக மேற்கொள்ளலாம். தனிமைப்படுத்துதலில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வத்தை அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.


தடுப்பூசி திட்டம் தொடங்கிய (டிச., 20) சில நாட்களிலேயே அதிக பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது. கொரோனா முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தினமும் 1.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (2)

03-ஜன-202110:43:04 IST Report Abuse
ஆப்பு நமக்கு 130 கோடி மக்களை ரவுண்டு கட்டி அடுச்சு முடக்கினப்போ இருந்த வேகம் தடுப்பூசி குடுக்கறதில இல்லை.
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
03-ஜன-202114:06:04 IST Report Abuse
Fastrackஓசியில புள்ள பெத்துக்க நினைக்கிறீங்களே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X