சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிக்னலில் பேராசிரியை தீக்குளிக்க முயற்சி: ஈரோட்டில் இரவில் பரபரப்பு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
ஈரோடு: கல்லூரி பேராசிரியை, போக்குவரத்து சிக்னலில் நின்று, தீக்குளிக்க முயன்றதால், ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி, திருவெறும்பூரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 32, கல்லூரி பேராசிரியை. ஈரோடு, லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கவுரி பிரகாஷ், 35; இருவருக்கும் எட்டு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. வரதட்சணையாக, 30 பவுன் நகை போட்டுள்ளனர். மேலும், 30 பவுன் நகை, 35 லட்சம்

ஈரோடு: கல்லூரி பேராசிரியை, போக்குவரத்து சிக்னலில் நின்று, தீக்குளிக்க முயன்றதால், ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.


திருச்சி, திருவெறும்பூரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 32, கல்லூரி பேராசிரியை. ஈரோடு, லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கவுரி பிரகாஷ், 35; இருவருக்கும் எட்டு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. வரதட்சணையாக, 30 பவுன் நகை போட்டுள்ளனர். மேலும், 30 பவுன் நகை, 35 லட்சம் ரூபாய் ரொக்கம் தந்தால்தான், மகனுடன் வாழ முடியும் என, மாமியார் தமிழரசி, கடந்த சில தினங்களாக துன்புறுத்தினாராம். இந்நிலையில் திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று வந்த பேராசிரியை, ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, ப.செ.பார்க் சிக்னல் அருகில், இரவு, 8:50 மணியளவில் பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி, தீக்குளிக்க வைக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், மக்கள் அதிர்ச்சி அடைந்து, தடுத்து நிறுத்தினர். போலீசார் சமாதானம் செய்து, மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X