பொது செய்தி

தமிழ்நாடு

615 கிலோ கழிவை அகற்றிய 550 தன்னார்வலர்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
சேலம்: சேலத்தை, குப்பையில்லா மாநகரமாக மாற்ற, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, நடைபயிற்சியின்போது, பாதையில் உள்ள குப்பையை சேகரித்து அகற்றும், 'சேலம் பிளாகிங்' நிகழ்ச்சி, சனிதோறும் நடக்கிறது. நேற்று, சூரமங்கலம் மண்டலத்தில் அபிராமி கார்டன், அண்ணா நகர் மாமாங்கம், முல்லை நகர்; அஸ்தம்பட்டி மண்டலத்தில் ஹவுசிங் போர்டு, அய்யந்திருமாளிகை, திருநகர் பிரதான சாலை,

சேலம்: சேலத்தை, குப்பையில்லா மாநகரமாக மாற்ற, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, நடைபயிற்சியின்போது, பாதையில் உள்ள குப்பையை சேகரித்து அகற்றும், 'சேலம் பிளாகிங்' நிகழ்ச்சி, சனிதோறும் நடக்கிறது. நேற்று, சூரமங்கலம் மண்டலத்தில் அபிராமி கார்டன், அண்ணா நகர் மாமாங்கம், முல்லை நகர்; அஸ்தம்பட்டி மண்டலத்தில் ஹவுசிங் போர்டு, அய்யந்திருமாளிகை, திருநகர் பிரதான சாலை, பச்சுடையாளர் காடு, தெற்கு அழகாபுரம்; அம்மாபேட்டை மண்டலத்தில் தியாகி நடேசன் தெரு, மாரியப்பன் நகர், தாதம்பட்டி; கொண்டலாம்பட்டி மண்டலத்தில் வாய்க்கால்கரை, மாநகர் சாலை, புட்டாமிஷின் தெரு ஆகிய இடங்களில் நடந்தது. இதில், அபிராமி கார்டன், காமராஜ் நகர், செல்வம் நகர், சேலம் குடியிருப்போர் நலச்சங்கங்கள், விநாயகா நகர், மாரியப்பன் நகர் குடியிருப்போர் சங்கங்கள், சேலம் இளைஞர்கள் குழு, குகை ரோட்ராக்ட் சங்கம், சேலம் நுகர்வோர் குரல் உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து, 550 தன்னார்வர், 615 கிலோ பிளாஸ்டிக் கழிவை அகற்றினர். கொண்டலாம்பட்டி, ரங்காபுரத்தில் நடந்த, 'சேலம் பிளாகிங்' பணியில், கமிஷனர் ரவிச்சந்திரன் பங்கேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X