சேலம்: மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், இன்று காலை, சேலத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். மதியம், 3:30 மணிக்கு, அழகாபுரம், தெய்வீகம் திருமண மண்டபம் அருகே, மக்கள் இடையே பேசுகிறார். அங்கிருந்து, ஏற்காடு சென்று, அங்குள்ள ஏரி அருகில், மக்கள் இடையே பேசுகிறார். தொடர்ந்து, ?ஷாபா ஓட்டலில், தோட்ட தொழிலாளர்களுடன் கலந்தாய்வு நடத்துகிறார். பின், அயோத்தியாப்பட்ட ணத்தில், மக்களிடம் பேசிவிட்டு, இரவு, 8:00 மணிக்கு, ரெட்டிப்பட்டி, அஷ்வா பார்க் ஓட்டல் எதிரே, மக்களிடம் பேசுகிறார். நாளை காலை, 10:15 மணிக்கு, நான்கு ரோடு ரவுண்டானாவில், மக்களை சந்திக்க உள்ளார். தொடர்ந்து, அம்மாபேட்டை, காமராஜர் காலனியில் உள்ள, கொங்கு கல்யாண மண்டபத்தில், கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பார். அங்கிருந்து, கருவாடு பாலம் சென்று, மக்களிடம் பேச உள்ளார். இதையடுத்து, கொண்டலாம்பட்டி சந்தையில், மக்களிடையே பேச உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE