கெங்கவல்லி: கெங்கவல்லி, வலசக்கல்பட்டி மலைக்கிராமத்தில், தி.மு.க., சார்பில், மக்கள் கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது. முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி தலைமை வகித்தார். அதில், 'எங்கள் ஊரில் வசிக்கும் மாணவ, மாணவியர் ஜாதி சான்று கேட்டு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. 'டவர்' இல்லாததால், மொபைல் போன் பயன்படுத்த முடியாததோடு, மாணவர்கள், இணையவழி பாட வகுப்பில் பங்கேற்பதில்லை' என்றனர். ரேகாபிரியதர்ஷினி, 'ஆர்.டி.ஓ.,விடம், ஜாதி சான்று குறித்து பேசியபோது, விசாரணையில் உள்ளதாகவும் விரைவில் வழங்கப்படும் என்றார். இடம் ஆய்வு செய்து, டவர் அமைக்க, விரைவில் பணி தொடங்கும் என, தொலைத்தொடர்பு அதிகாரிகள் கூறினர். தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுங்கள். அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும்' என்றார். தொடர்ந்து, மலைவாழ் பெண்கள், 'கோரிக்கையை கேட்டு தீர்வு காண, அதிகாரிகளிடம் பேசி, வாக்குறுதி அளித்ததற்கு நன்றி' என்றனர். பின், ரேகாபிரியதர்ஷினியை நடுவில் நிற்க வைத்து, பாரம்பரிய முறையில் கும்மி பாடல்களை பாடி நன்றி தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE