பொது செய்தி

தமிழ்நாடு

தொப்பூர் கணவாயில் விபத்தை தடுக்க நெடுஞ்சாலைத்துறை தற்காலிக ஏற்பாடு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
தொப்பூர்: தொப்பூர் கணவாயில், விபத்தை தடுக்க, தற்காலிகமாக நெடுஞ்சாலைத் துறையினர் தற்காலிக ஏற்பாடுகளை செய்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், தொப்பூர் தேசிய நான்கு வழிச்சாலையில், நாள்தோறும், ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. தொப்பூர் கணவாய் சாலையின் பல இடங்கள், தாழ்வாகவும், வளைவாகவும் உள்ளதால், அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு, பலர் பலியாவது தொடர்கிறது. கடந்த, 12ல்,

தொப்பூர்: தொப்பூர் கணவாயில், விபத்தை தடுக்க, தற்காலிகமாக நெடுஞ்சாலைத் துறையினர் தற்காலிக ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தர்மபுரி மாவட்டம், தொப்பூர் தேசிய நான்கு வழிச்சாலையில், நாள்தோறும், ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. தொப்பூர் கணவாய் சாலையின் பல இடங்கள், தாழ்வாகவும், வளைவாகவும் உள்ளதால், அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு, பலர் பலியாவது தொடர்கிறது. கடந்த, 12ல், அப்பகுதியில் நடந்த விபத்தில், 16 வாகனங்கள் சேதமானதோடு, நான்கு பேர் பலியாகினர். லேசான காயங்களுடன், பலர் உயிர் தப்பினர். கடந்த ஓராண்டில் மட்டும், இப்பகுதி விபத்தில், 42 பேர் பலியாகி உள்ளனர். இப்பகுதியில், விபத்தை தடுக்க, மாவட்ட கலெக்டர் கார்த்திகா, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், போக்குவரத்துத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். இதில் பெறப்பட்ட ஆலோசனை படி, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கட்டமேட்டில் இருந்து, தொப்பூர் கணவாய் போலீஸ் குடியிருப்பு வரை, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, 22 இடங்களில், மில்லி குரோலிங் வகையில், சாலை தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். மேலும், வாகனங்களின் அதிர்வை ஏற்படுத்தும், ரோடு மார்க்கிங் செய்தும், முக்கியமான, நான்கு இடங்களில், அபாய விளக்கு எச்சரிக்கையும் அமைத்துள்ளனர். மேலும், ஒலிபெருக்கி அமைத்து, வாகனங்களை மெதுவாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக, தொப்பூர் கணவாயில் விபத்து குறைந்துள்ளது. இதற்கு முற்றிலும் தீர்வு காண, கிடப்பிலுள்ள கட்டமேட்டிலிருந்து தொப்பூர் வரையிலான மேம்பால பணியை உடனே துவக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X