அரூர்: அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு வழங்க, அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு சார்பில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டும் அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக, தலா, 2,500 ரூபாயுடன், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, துண்டு கரும்புக்கு பதிலாக முழு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, ஐந்து கிராம் ஏலக்காய், துணிப்பை போன்றவை ஜன., 4 முதல், வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, பொங்கல் பொருட்கள் அடங்கிய பை, ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் கடந்த, 26 முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இருந்து, மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, கரும்பு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று, வெளியூர்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, லாரிகளில் ஏற்றி வரப்பட்ட கரும்பு கட்டுகளை பிரித்து, அவற்றை சரக்கு வாகனங்கள் மூலம், ரேஷன்கடைகளுக்கு அனுப்பும் பணியில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE