தேங்கும் சாக்கடை கழிவுநீரால் அவதி; பள்ளி திறக்கும் முன் அகற்றப்படுமா?

Added : ஜன 03, 2021
Share
Advertisement
காரிமங்கலம்: மாட்லாம்பட்டியில், அரசு உயர்நிலைப்பள்ளி அருகே, தேங்கும் சாக்கடை கழிவுநீரை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்துக்கு உட்பட்ட இப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பைசுஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட இதன் அருகே, பெரிய அளவிலான சாக்கடை கால்வாய் செல்கிறது. இது, பல இடங்களில் அடைத்துக்கொண்டு,

காரிமங்கலம்: மாட்லாம்பட்டியில், அரசு உயர்நிலைப்பள்ளி அருகே, தேங்கும் சாக்கடை கழிவுநீரை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்துக்கு உட்பட்ட இப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பைசுஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட இதன் அருகே, பெரிய அளவிலான சாக்கடை கால்வாய் செல்கிறது. இது, பல இடங்களில் அடைத்துக்கொண்டு, கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும், இக்கால்வாயை தூர்வாராமல் உள்ளதால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, பஞ்., நிர்வாகம் சார்பில், இந்த சாக்கடை கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X