பொது செய்தி

தமிழ்நாடு

பர்மிட் இல்லா 18 தனியார் பஸ்கள் பறிமுதல்: வீடு திரும்ப முடியாமல் தவித்த தொழிலாளர்கள்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில், தனியார் நிறுவனத்துக்கு, ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்ட, 18 தனியார் பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால், தொழிலாளர்கள் வீடு திரும்ப முடியாமலும், பணிக்கு வர முடியாமலும் தவித்தனர்.ஓசூர் சிப்காட், 1 மற்றும் 2ல், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மூன்று யூனிட்டுகள் உள்ளன. இங்கு, 6,250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கர்நாடகா மாநிலம், ஆனைக்கல்,

ஓசூர்: ஓசூரில், தனியார் நிறுவனத்துக்கு, ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்ட, 18 தனியார் பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால், தொழிலாளர்கள் வீடு திரும்ப முடியாமலும், பணிக்கு வர முடியாமலும் தவித்தனர்.


ஓசூர் சிப்காட், 1 மற்றும் 2ல், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மூன்று யூனிட்டுகள் உள்ளன. இங்கு, 6,250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கர்நாடகா மாநிலம், ஆனைக்கல், பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி, பாகலூரிலுள்ள தொழிலாளர்கள் தினமும் பணிக்கு வந்து செல்ல, 25க்கும் மேற்பட்ட பஸ்களை, தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில், அந்நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. சில மாதங்களில், பழைய ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மற்றொரு தனியாரிடம் புதிய ஒப்பந்தம் போடப்பட்டு, கடந்த, 1ல் இருந்து தொழிலாளர்கள் வந்து செல்ல, பஸ்கள் இயக்கப்பட்டன. அதற்கு பர்மிட் இல்லாததும், தமிழக வரி செலுத்தாததும், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தெரியவந்தது. இதனால், அதிரடி ஆய்வு நடத்திய அதிகாரிகள், நேற்று முன்தினம் ஐந்து பஸ்களை, பறிமுதல் செய்தனர். நேற்று மாலை, மீண்டும் ஆய்வு நடத்திய அதிகாரிகள், 13 பஸ்களை பறிமுதல் செய்தனர். அதனால், நேற்று பணிக்கு வந்த, 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மாலையில் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். இரவு பணிக்கு வர வேண்டிய தொழிலாளர்களும், பஸ் இல்லாமல் சிரமப்பட்டனர். இதனால், சக தொழிலாளர்களின் பைக்குகளில், மற்ற தொழிலாளர்கள் வீடு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X