பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சள் ஏற்றுமதிக்கு அரசு மறுப்பதால் சாகுபடியில் ஆர்வமின்றி விவசாயிகள்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: விதை மஞ்சள் ஏற்றுமதியை அனுமதிக்கும் மத்திய அரசு, மஞ்சள் ஏற்றுமதிக்கு அனுமதி மறுப்பதால், மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவேரிப்பட்டணம், மத்தூர், ஊத்தங்கரை மற்றும் பர்கூர் பகுதிகளில், 5,000 ஏக்கரில் விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு, 30 குவிண்டால் மஞ்சள் விளைகிறது. இதன் மூலம், விவசாயிகளுக்கு,

கிருஷ்ணகிரி: விதை மஞ்சள் ஏற்றுமதியை அனுமதிக்கும் மத்திய அரசு, மஞ்சள் ஏற்றுமதிக்கு அனுமதி மறுப்பதால், மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவேரிப்பட்டணம், மத்தூர், ஊத்தங்கரை மற்றும் பர்கூர் பகுதிகளில், 5,000 ஏக்கரில் விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு, 30 குவிண்டால் மஞ்சள் விளைகிறது. இதன் மூலம், விவசாயிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. மே மாதம் நடவு செய்யப்படும் மஞ்சள், ஒன்பது மாதங்களுக்கு பின், ஜன.,ல் அறுவடையாகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில், மஞ்சள் சாகுபடி பரப்பு, 50 சதவீதமாக குறைந்த நிலையிலும், அதன் விலையில் உயர்வில்லை.

இது குறித்து, மஞ்சள் விவசாய சங்க, தேசிய பொதுச்செயலாளர் ராமகவுண்டர் கூறியதாவது: மஞ்சளில், அவரை, மிளகாய், துவரை ஆகியவற்றை, ஊடுபயிராக பயிரிடலாம். மேலும், தென்னை, மற்றும் மா மரங்களுக்கு இடையில், மஞ்சளையே ஊடுபயிராகவும் பயிரிடலாம். கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன், 10 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்த நிலையில், தற்போது அவை பாதியாக குறைந்துள்ளது. கடந்த, 50 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து வெளிநாடுகள் மஞ்சள் வாங்கி வந்த நிலையில், கடந்த, 2019ல் இருந்து விதை மஞ்சளை ஏற்றுமதி செய்வதால், அவர்களே, மஞ்சள் சாகுபடி செய்கின்றனர். இதனால், மஞ்சள் ஏற்றுமதி முற்றிலும் நின்றது. எனவே, விதை மஞ்சள் ஏற்றுமதியை நிறுத்தி, மஞ்சளை ஏற்றுமதி செய்ய விவசாயிகள் போராடியும், மத்திய அரசு, கண்டுகொள்ளாமல் உள்ளது. வெளிநாடுகளில் ஒரு குவிண்டால் மஞ்சள், ஒரு லட்சம் ரூபாய் வரை விற்கிறது. ஆனால், வெளிநாடுகளுக்கு மஞ்சளை ஏற்றுமதி செய்ய அரசு மறுப்பதால், மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X