பொது செய்தி

தமிழ்நாடு

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்த்தால் குற்றவியல் நடவடிக்கை: கலெக்டர்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் ஜெயந்திரபானு ரெட்டி எச்சரித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க, மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இவை, இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. அத்துடன், எட்டு மற்றும் அதற்கு மேற்பட்ட

கிருஷ்ணகிரி: ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் ஜெயந்திரபானு ரெட்டி எச்சரித்துள்ளார்.


இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க, மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இவை, இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. அத்துடன், எட்டு மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழக்கூடியவை. இதனால், இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்து விட்டால், அவற்றை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று. இம்மீன்கள், நம் பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்ளும். மேலும், ஏரி மற்றும் ஆறுகளில் சென்று, பிற மீன் இனங்களை அழிப்பதால், ஒரு குறிப்பிட்ட காலத்தில், அதைத்தவிர, வேறு இன மீன்கள் பிழைக்க வாய்ப்பின்றி போகும். இதனால், மீனவர்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும். எனவே, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க வேண்டாம். ஏற்கனவே, மீன் பண்ணைகளில், இந்த மீன்களை வளர்த்து வருவோர் அவற்றை அழிக்க வேண்டும். ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்கும் பண்ணைகள் கண்டறியப்பட்டால், 04343- 235745 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். தடையை மீறி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு செய்தால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X