பொது செய்தி

தமிழ்நாடு

'விவசாயிகளிடம் ஸ்டாலின் பொய் பிரசாரம்'

Added : ஜன 03, 2021
Share
Advertisement
வேலூர்: ''விவசாயிகளிடையே, ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேசினார்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பத்தில் நேற்று நடந்த, பா.ஜ., பிரதிநிதிகள் மாநாட்டில், அவர் ?மேலும் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி வேண்டுமென மக்கள், நாடு முழுவதும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும், பா.ஜ.,வுக்கு ஆதரவு

வேலூர்: ''விவசாயிகளிடையே, ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேசினார்.


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பத்தில் நேற்று நடந்த, பா.ஜ., பிரதிநிதிகள் மாநாட்டில், அவர் ?மேலும் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி வேண்டுமென மக்கள், நாடு முழுவதும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும், பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. விவசாயிகள் நலனுக்காக, வேளாண் சட்டங்களை, மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த புதிய சட்டத்தால், விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்பதால், விவசாயிகள் வரவேற்கின்றனர். ஆனால், ஸ்டாலின் வேண்டுமென்றே, விவசாயிகளிடம் பொய் பிரசாரம் செய்து வருகிறார். பட்டியலின மாணவருக்கு, கல்வி உதவித்தொகை நிறுத்தப் பட்டுள்ளதாக, ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், மத்திய அரசு, பட்டியலின மாணவருக்கு, 60 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இதனால், ஒரு கோடி மாணவர்கள் பயன் அடைவார்கள். இதை மறைத்து, ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார். வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., மிகப்பெரிய வெற்றி பெறும். மேலும், இந்த தேர்தலில் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக, பா.ஜ., இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X