குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே, மூலகாங்குப்பத்தை சேர்ந்த விவசாயி அரிச்சந்திரன், 56; இவர், தன் வளர்க்கும், 10 ஆடுகளை மேய்ச்சலுக்கு, அங்குள்ள காப்புக்காட்டில் நேற்று முன்தினம் காலை விட்டுள்ளார். மாலையில், எட்டு ஆடுகள் மட்டும் பட்டிக்கு திரும்பின. வனப்பகுதிக்கு சென்று அவர் பார்த்ததில், இரண்டு ஆடுகள் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளன. குடியாத்தம் வனத்துறையினர், இறந்த ஆடுகளை பரிசோதித்ததில், சிறுத்தை அடித்து ஆடுகள் இறந்தது தெரிய வந்தது. சிறுத்தையின் கால்தடத்தை ஆய்வு செய்ததில், அருகே ஆந்திரா மாநிலம், சித்தூர் வனப்பகுதியிலிருந்து, ஐந்துக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் அங்கு வந்துள்ளதை அறிந்தனர். எனவே, இரவில் காப்புக்காட்டுக்குள் மக்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும், தட்டோரோ மூலம் மக்களை, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE