தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இளைஞர்கள்,மீண்டும் கொரோனா வைரஸ் உருமாறி பரவுதல் காரணமாக, மீண்டும் வேலைக்கு செல்வதில்சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இல்லாத நிலையில், முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. தற்போது, மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி, விவசாய வேலையாட்கள் தட்டுப்பாட்டால்,விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த, 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கிராமம், நகரம் என்றபாகுபாடின்றி, படித்து முடித்ததும் பெரும்பாலான இளைஞர்கள்வெளிநாட்டில் வேலைக்கு செல்வது அதிகரித்து உள்ளது.

பல்வேறு பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தனர்.கடந்த ஆண்டு உலகம் முழுதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலால், வெளிநாடுகளில் பணிபுரிந்த இளைஞர்கள், அங்கு கடந்த பல மாதங்களாக வேலையின்றி, வீடு, அறைகளில் முடங்கி கிடக்கின்றனர். பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். தற்போது, மீண்டும் கொரோனா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உருமாறி பரவி வருவதால், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், அதே பணிக்கு தற்போது திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும், புதியதாக, பல்வேறு கனவுகளுடன் வெளிநாட்டில் வேலைக்கு போக காத்திருந்த இளைஞர்களின் கனவும் கேள்வி குறியாகியுள்ளது.
இதுகுறித்து இளைஞர்கள் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலக நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், எல்லா நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன.எனவே, ஒவ்வொரு நாடும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பினை கொடுக்க, அதிக ஆர்வம் காட்டுகின்றன.வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க தயக்கம் காட்டுகின்றன.மேலும், கொரோனாஅச்சத்தால், சொந்த ஊர் திரும்பிய பலர், மீண்டும் அதே நாட்டிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இவ்வாறு அவர்கள்கூறினர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE