பொது செய்தி

இந்தியா

‛கோவிஷீல்டு, கோவாக்சின்' தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ‛ கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.பரிந்துரைஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த சீரம்
Covishield, DCGI, covaxin, corona, coronavirus, covid19, virus, கோவிஷீல்டு, கோவாக்சின், டிசிஜிஐ, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19,

புதுடில்லி: கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ‛ கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.


பரிந்துரை



ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் பெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ‛பாரத் பயோடெக்' நிறுவனமும், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பும் இணைந்து ‛கோவாக்சின்' என்ற தடுப்பூசி தயாரித்துள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.


latest tamil news




இந்த இரண்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி கோரி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இதனை ஆய்வு செய்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழுவினர், ‛ இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதிக்கலாம்' என பரிந்துரை செய்திருந்தன.


பல கட்ட பரிசோதனை



இது தொடர்பாக இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் சோமானி கூறியதாவது:
நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று, ‛கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இரண்டு தடுப்பூசிகளையும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்கலாம். இந்த இரண்டு தடுப்பூசிகளையும் இரண்டு டோஸ்கள் வழங்கப்பட வேண்டும். இந்த தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனை தொடர்ந்து நடக்கும். கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசியை 3வது கட்ட பரிசோதனை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


பாராட்டு



இதனை வரவேற்று பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுப்படுத்தும் வகையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொரோனா இல்லாத மற்றும் ஆரோக்கியமான இந்தியா என்ற நோக்கத்தை விரைவுபடுத்தும் வகையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மமற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு பாராட்டுகள். கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
03-ஜன-202122:09:52 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy அகிலேஷ் யாதவ் , ஆனந்தசர்மா ,சைமா , குருமா , சுடலை , கம்யூனிஸ்ட்டுகளை கேட்டுவிட்டு ஊசி போடவும். இல்லாவிட்டால் மோடி ஊசி மரபணுவை மாற்றும் என்று கூட பிரச்சாரம் செய்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X