மாடல் உலகில் சாதனை நிலா நித்யா

Added : ஜன 03, 2021
Share
Advertisement
கார்மேக வானில் கண்சிமிட்டும் கண் கவரும் நட்சத்திரம்... அதிகாலை குளிரில் ஊர்கோலம் போகும் பெண் சித்திரம்... மான்விழி இமைகள், மெல்லிடையில் பிறை நிலாக்களின் சுமைகள், ஆயிரத்தில் ஓரழகியான நீயே கருப்பு பேரழகி, புல்லரிக்கும் புன்னகை பூக்கும் இதழ் அழகி... என நினைத்தாலே இனிப்பு கவிபாட துாண்டும் மாடலிங் நி்த்யா மனம் திறக்கிறார். டஸ்கி ஸ்கின் நித்யா மாடலிங் துறைக்கு எப்படி
மாடல் உலகில் சாதனை நிலா நித்யா

கார்மேக வானில் கண்சிமிட்டும் கண் கவரும் நட்சத்திரம்... அதிகாலை குளிரில் ஊர்கோலம் போகும் பெண் சித்திரம்... மான்விழி இமைகள், மெல்லிடையில் பிறை நிலாக்களின் சுமைகள், ஆயிரத்தில் ஓரழகியான நீயே கருப்பு பேரழகி, புல்லரிக்கும் புன்னகை பூக்கும் இதழ் அழகி... என நினைத்தாலே இனிப்பு கவிபாட துாண்டும் மாடலிங் நி்த்யா மனம் திறக்கிறார்.


டஸ்கி ஸ்கின் நித்யா மாடலிங் துறைக்கு எப்படி வந்தீங்க



சொந்த ஊர் துாத்துக்குடி, கல்யாணத்திற்கு பின் சென்னை வந்தாச்சு. சின்ன வயதிலிருந்தே மாடலிங் துறையில் ஆர்வம் இருந்தது. பல மாநில மாடல்களுக்கு நடுவில் டஸ்கி ஸ்கின் பொண்ணு... சாதிக்க முடியாதுன்னு நினைச்சு வந்தேன். ஆனால், டஸ்கி இன்றைய மாடலிங்கில் ஒஸ்தியா இருக்கு.


எந்த மாதிரி மாடலிங் எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க



ஜூவல்லரி டிசைனர், மேக்கப் ஆர்டிஸ்ட், காஸ்ட்யூம் டிசைனர், பேஷன் ஷோக்களுக்கு மாடலிங் பண்றேன், குடும்பத்தலைவியாக இருப்பதால் பல பொறுப்புகள் இருக்கு. அதுக்கெல்லாம் நடுவில் சாதிக்கணும் என்கிற நம்பிக்கையில் முன்னேறிட்டு இருக்கேன்.


பேஷன் ஷோ போட்டிகளில் பங்கேற்று இருக்கீங்களா


எனக்கு ஒரு மகன் இருக்கான்... அதனால், அடுத்த ஆண்டு நடக்க போற அம்மாக்களுக்கான பேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்கிறேன். அதுக்கு அப்புறம் சிறப்பு பயிற்சிகள் எல்லாம் பெற்று பலவிதமான பேஷன், ரேம்ப் வாக் ஷோக்களில் பங்கேற்பேன்.


நீங்கள் விரும்பி அணியும் ஆடைகள் என்ன, கிளாமர் பிடிக்குமா



சேலை, தாவணி போன்ற பாரம்பரிய ஆடைகள் தான் விரும்பி அணிவேன். சில நேரம் ஜீன்ஸ், டி சர்ட். கிளாமர் சுத்தமா எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அதனால் கிளாமர் இல்லாத வெர்ஸ்ட்டன் ஆடைகள் கொஞ்சம் பிடிக்கும்.


சிலிம் அண்ட் சிம்பிளா இருக்கீங்க ரகசியம் சொல்லுங்க



நேரம் கிடைக்கும் போது மகனுடன் விளையாடுறது, டான்ஸ் ஆடுறது, நேரத்திற்கு சாப்பிடுறது தான் என் சிலிம் ரகசியம். தினமும் வாக்கிங் போறதால புத்துணர்ச்சி கிடைக்குது. டீ, காபியை விட ஜூஸ் அதிகம் குடிப்பேன்.


மாடலிங் பெண்ணுக்கான சிறப்பு உங்களிடம் என்ன இருக்கு



பொதுவாக மாடலிங் பெண்களின் ஹேர் குட்டையா தான் இருக்கும். ஆனால், எனக்கு இடை வரை ஹேர் இருக்குறது பெரிய சிறப்பு. அதே மாதிரி என் உயரம் 5.6 அடி, எடை 56 கிலோ. இதுவே எனக்கு நிறைய மாடலிங் வாய்ப்புகளை வாங்கி தருது.


சினிமாவில் நடிப்பீங்களா, எதிர் கால லட்சியம், கனவுகள் என்ன



கிளாமர் இல்லாத கேரக்டர் கிடைத்தால் சினிமாவில் நடிப்பேன். குறும்படம், சீரியல்களில் வில்லியா நடிக்க விரும்புறேன். மிஸ்சர்ஸ் சென்னை, தமிழ்நாடு, இந்தியா விருதுகளை வாங்குறது தான் லட்சியம். நான் இந்த அளவு மாடலிங் துறைக்கு வர கணவர் பாலகுமார், அண்ணி பொன் ரூபி, அக்கா விஜயலட்சுமி காரணம்.

- Instagrame: sriraji_sr

-ஸ்ரீனி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X