திருப்பரங்குன்றம்: வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, நிலையூர், சம்பக்குளம், தோப்பூர், வலையங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. பனி காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது: தற்போது அதிகம் பனி விழுவதால் மல்லிகை பூ விளைச்சல் இல்லை. பொதுவாக கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் விளைச்சல் குறையும். இந்தாண்டு பெரும்பாலான நிலங்களில் விளைச்சல் முற்றிலும் முடங்கி விட்டது. ஒரு சிலருக்கு ஏக்கருக்கு 200 கிராம்கூட கிடைக்கவில்லை.தற்போது கிலோ ரூ. 3500 வரை விலை போகிறது. ஆனால் விளைச்சல் இல்லை. மற்ற மாதங்களில் ஏக்கருக்கு 70 - 100 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். அப்போது விலை குறைந்துவிடும். பூ சாகுபடியை மட்டுமே நம்பியுள்ள எங்களை போன்ற விவசாயிகள் 3 மாதங்கள் வருமானமின்றி தவிக்கிறோம் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE