தமிழ்நாடு

மதுரை நகர் புதிய ஸ்டேசன்களுக்கு எல்லைகள் பிரிப்பு: விரிவாக்க பகுதிகளுக்கு கிடைத்ததை விமோசனம்

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021
Share
Advertisement
மதுரை: மதுரை நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட மாட்டுத்தாவணி, திருப்பாலை போலீஸ் ஸ்டேசன்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், விரிவாக்க பகுதிகளில் தொடர் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கட்டுப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாநகர், புதுார், தல்லாகுளம் ஸ்டேஷன்களின் விரிவாக்க பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. மாட்டுத்தாவணி ஸ்டேஷன்கீழ் எம்.ஜி.ஆர்., பஸ்
மதுரை நகர் புதிய ஸ்டேசன்களுக்கு எல்லைகள் பிரிப்பு: விரிவாக்க பகுதிகளுக்கு கிடைத்ததை விமோசனம்

மதுரை: மதுரை நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட மாட்டுத்தாவணி, திருப்பாலை போலீஸ் ஸ்டேசன்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், விரிவாக்க பகுதிகளில் தொடர் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கட்டுப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணாநகர், புதுார், தல்லாகுளம் ஸ்டேஷன்களின் விரிவாக்க பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. மாட்டுத்தாவணி ஸ்டேஷன்கீழ் எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட், ஆம்னி பஸ் ஸ்டாண்ட், நெல், பூ மார்க்கெட், கே.கே.நகர் ஆர்ச், ஏ.ஆர்., மருத்துவமனை முதல் வாக்கர்ஸ் கிளப் சந்திப்பு(தெற்கு பகுதி), லேக்வியூ ரோடு(வடபகுதி), சுந்தரம் பார்க், அப்போலோ மருத்துவமனை, வண்டியூர் கண்மாய், மேலமடை - கருப்பாயூரணி(நகர் எல்லை வடபகுதி), பாண்டியன் நகர்(கருப்பாயூரணி ஸ்டேஷன்), பாண்டி கோயில், ரிங் ரோடு பகுதி.மேலுார் ரோட்டில் பழ சந்தை முதல் உயர்நீதிமன்றம் சுற்றுச்சுவர் வரை, லேக் ஏரியா, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, உத்தங்குடி ரிங் ரோடு, உத்தங்குடி, அம்பலக்காரன்பட்டி, வளர்நகர், உலகநேரி, இலந்தைக்குளம்.திருப்பாலை ஸ்டேஷன்திருப்பாலை, கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, நாகனாகுளம்(79 தெருக்கள்), எஸ். கொடிக்குளம்(19 தெருக்கள்) இணைக்கப்பட்டுள்ளன. இவ்விரு ஸ்டேஷன்களுக்கும் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் தலா 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X