மதுரை:
மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சித்தா, ஆயுர்வேதாவிற்கு தனியாக 100 படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என எய்ம்ஸ் மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் கூறியுள்ளதாவது:தோப்பூரில் 222.47 ஏக்கரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. திட்டமதிப்பீடு ரூ.1264 கோடியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தியா, ஜிக்கா நிறுவனங்களுக்கு இடையேயான கடன் ஒப்பந்தம் தாமதமானது. தற்போது மார்ச்சில் கையெழுத்தாகவுள்ளது.எய்ம்ஸில் 750 படுக்கைகள் வருகின்றன. கூடுதலாக சித்தா, ஆயுர்வேதாவிற்கென 100 படுக்கைகளை அரசு ஒதுக்க வேண்டும். கொரோனா பேரிடரில் இம்மருத்துவ முறைகள் பெரிதும் கை கொடுத்தன. பாரம்பரிய மருத்துவங்களுக்கு படுக்கைகளை ஒதுக்க வேண்டும், என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE