பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
கரூர்: அமராவதி அணையில் இருந்து, புதிய வாய்க்காலில் திறக்கப்பட்ட, தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 821 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில், 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்

கரூர்: அமராவதி அணையில் இருந்து, புதிய வாய்க்காலில் திறக்கப்பட்ட, தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 821 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில், 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 89.51 அடியாக இருந்தது.

* க.பரமத்தி கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 62 கன அடியாக இருந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.42 அடியாக இருந்தது. இதனால், மீண்டும் நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.


* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 3,551 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிகளுக்கு, 2,831 கன அடி தண்ணீர் காவிரி யாற்றில் திறக்கப்பட்டது. மூன்று கிளை வாய்க்காலில், 720 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X