சென்னை:தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்ட குழு தன் பரிந்துரைகளை கூட்டுறவு துறையிடம் சமர்ப்பித்துள்ளது.தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 4449 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வூதியம் வழங்குமாறும்; ஓய்வு பெற்றவர்கள் கருணை ஓய்வூதியம் வழங்குமாறும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து பரிசீலிக்க கூட்டுறவு துறை மாநில தலைமை கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் தலைமையில் குழு அமைத்தது. அக்குழு ஏற்கனவே தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தியிருந்தது.தற்போது அக்குழு தன் பரிந்துரைகள் அடங்கிய விபரங்களை கூட்டுறவு துறை உயரதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் கருணை ஓய்வூதியமாக 1000 ரூபாய் வழங்கலாம் எனவும்; தற்போது பணிபுரிவோருக்கு பங்களிப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE