வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே இடப்பிரச்னையில் குடும்பத்துடன் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்திய மதபோதகர் இம்மானுவேல் 42, கைது செய்யப்பட்டார்.நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த மதபோதகர் இம்மானுவேல் 42. வடமதுரையை அடுத்த செங்குறிச்சி பாண்டியனுார் பகுதியில் 'சர்ச்' கட்ட வாங்கிய இடம் தொடர்பாக அவருக்கு சிலருடன் பிரச்னை உள்ளது.இடப்பிரச்னையில் நீதி வேண்டும் என தட்டிகளை தயார் செய்த இம்மானுவேல், நேற்று காலை 7:30 மணிக்கு பாண்டியனுார் நால்ரோடு பகுதியில் திண்டுக்கல்- எஸ்.புதுப்பட்டி அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்தார்.மனைவி நித்யா, மகள், மகனுடன் நடந்த இந்த போராட்டம் 2 மணிநேரம் நீடித்தது. டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் கருப்பையா புகாரில் வடமதுரை போலீசார் இம்மானுவேலை கைது செய்து பஸ்சை விடுவித்தனர். அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE