அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் ஸ்டாலின் குடும்பத்தினர் தவிர விசுவாசிகள் வளர முடியாது

Added : ஜன 03, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:''தி.மு.க.,வில் ஸ்டாலின் குடும்பத்தினர் தவிர உழைப்பவர்கள், விசுவாசிகள் வளர முடியாது'' என முதல்வர் பழனிசாமி பேசினார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த அ.தி.மு.க., இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பபிரிவினரின் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:சட்டசபை தேர்தல் போரில் தி.மு.க.,வை வெல்ல இளம் சிப்பாய்கள் தயாராக உள்ளனர். நாங்கள் படிக்கும் காலத்தில்



ராமநாதபுரம்:''தி.மு.க.,வில் ஸ்டாலின் குடும்பத்தினர் தவிர உழைப்பவர்கள், விசுவாசிகள் வளர முடியாது'' என முதல்வர் பழனிசாமி பேசினார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த அ.தி.மு.க., இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பபிரிவினரின் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:சட்டசபை தேர்தல் போரில் தி.மு.க.,வை வெல்ல இளம் சிப்பாய்கள் தயாராக உள்ளனர். நாங்கள் படிக்கும் காலத்தில் தகவல்தொழில்நுட்பம் வளரவில்லை. பள்ளிக்கு ஆற்றை கடந்து சென்றேன். அலைபேசி வசதியில்லை. தற்போது நவீன விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். அதற்கேற்ப இளைஞர்கள் திறம்பட செயல்பட வேண்டும்.நாம் வியூகம் அமைத்து தேர்தலில் செயல்பட வேண்டும். நம் கட்சியில் முதல்வர், அமைச்சர்களை எளிதாக பார்க்க முடியும். ஸ்டாலினை பெரிய தலைவர்கள், நிர்வாகிகள் கூட அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது. இவர்களின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்றார்.முன்னதாக அவர் பரமக்குடியில் மக்களுடன் கலந்துரையாடியபோது பேசியதாவது:''ஏழு உட் பிரிவுகளாக பிரிந்து உள்ள மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற அமைப்பாக உருவாக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு 30 நாட்களுக்குள் கிடைக்கும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க., வை உடைக்க போகிறேன் என்கிறார். ஒரு அ.தி.மு.க., தொண்டனையும் தொட்டு பார்க்க முடியாது. ஆட்சியைக் கவிழ்க்க எங்களது சட்டசபை உறுப்பினர்களையும் பிரித்து வெளியேற்ற முயன்றார். எதுவும் நடக்கவில்லை. ஸ்டாலின் உழைத்து ஆட்சிக்கு வருவதை விடுத்து குறுக்கு வழியில் வரவே விரும்புகிறார்., அவரது கனவு கானல் நீராகவே இருக்கும், பலிக்காது.தைப்பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2500 வழங்கும் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மூலம் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலினை மறந்து விடுங்கள். தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடுங்கள்'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X