பொது செய்தி

இந்தியா

கலால் துறை அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

Added : ஜன 03, 2021
Share
Advertisement
பெங்களூரு: வருவாய் அதிகரிப்பது தொடர்பாக, கலால் துறை அமைச்சர் நாகேஷ், உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:l கலால் துறை ஊழியர்கள் என்பதை மாற்றி, கலால் துறை ஏட்டுகள், தலைமை ஏட்டுகள் என்று பெயர் மாற்றுதல்.l புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவியாக, ஏட்டுகளுக்கு பைக்குகள் வழங்கல்.l வருவாய் பெருக்கும் வகையில்,

பெங்களூரு: வருவாய் அதிகரிப்பது தொடர்பாக, கலால் துறை அமைச்சர் நாகேஷ், உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:l கலால் துறை ஊழியர்கள் என்பதை மாற்றி, கலால் துறை ஏட்டுகள், தலைமை ஏட்டுகள் என்று பெயர் மாற்றுதல்.l புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவியாக, ஏட்டுகளுக்கு பைக்குகள் வழங்கல்.l வருவாய் பெருக்கும் வகையில், மதுக்கடைகளுக்கு வழங்கப்படும் உரிமம் வழங்கலில் மாற்றம் கொண்டு வருதல்.l வருவாய் ஈட்டுவதற்காக, கலால் துறையில் வீட்டிலிருந்து வேலை முறையை நீக்குவது குறித்து பிரதமரை கோருதல்.l அதிகபட்ச வருவாய் ஈட்டியதற்காக, கோலார், துமகூரு, ராம்நகர் கலால் துறை ஏட்டுகளை பாராட்டுதல்.l புகார்களை விரைவில் விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுப்பது.l முறைகேட்டு மது விற்பனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுப்பது.l மதுக்கடைகளில் திடீர் சோதனை நடத்தி, அபராதம் விதிப்பது.l கிராமங்களில் அபராதம் விதிப்பதை குறைப்பது.l பாரட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுப்பது.l துாய்மை கடைபிடிக்காதோர் மீது நடவடிக்கை எடுப்பது.l போதை பொரும் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க விதிமுறை கடுமையாக்குவது.l மலைப்பகுதிகளில் ஜீப், போலேரோ வாகனங்கள் வழங்கல்.l அனைத்து கலால் துறை இன்ஸ்பெக்டர்களுக்கும் மொபைல் போன் வழங்கல்.l கலால் பவன் கட்ட, 150 கோடி ரூபாய் கேட்டு அரசுக்கு கோப்பு தாக்கல் செய்வது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X