பொது செய்தி

தமிழ்நாடு

கணினி பயிற்றுனர் பணி: ஆன்லைனில் கலந்தாய்வு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
நாமக்கல்: தமிழகம் முழுவதும், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள கணினி பயிற்றுனர் நிலை-1 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. அதில், 742 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, பணிநியமன ஆணை வழங்குவதற்கான, ஆன்லைன் கலந்தாய்வு, தமிழகம் முழுவதும், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று துவங்கியது. நாமக்கல்லில் நடந்த

நாமக்கல்: தமிழகம் முழுவதும், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள கணினி பயிற்றுனர் நிலை-1 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. அதில், 742 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, பணிநியமன ஆணை வழங்குவதற்கான, ஆன்லைன் கலந்தாய்வு, தமிழகம் முழுவதும், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று துவங்கியது. நாமக்கல்லில் நடந்த கலந்தாய்வுக்கு, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம், ஐந்து காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக நடந்த ஆன்லைன் கலந்தாய்வுக்கு, 42 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கலந்தாய்வு இன்றும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X