நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலா தலமாக கொல்லிமலை அமைந்துள்ளது. விடுமுறை நாட்களில், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, 2020, மார்ச், 24 முதல், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. எட்டு மாதங்களுக்கு பின், ஊரடங்கு தளர்வு அகற்றப்பட்டு, சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல, மறு உத்தரவு வரும் வரை, சுற்றுலா பயணிகள் செல்ல, மாவட்ட வனத்துறை நேற்று முன்தினம் தடை விதித்தது. இதற்கிடையில், நாளை (ஜன., 4) வரை, கொல்லிமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் மெகராஜ் கூறியதாவது: மாவட்டத்தில், கொரோனா பரவுதல் குறைந்து வருகிறது. இந்நிலையில், கொல்லிமலைக்கு விடுமுறை நாட்களில், அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வர். அதன் காரணமாக, கொரோனா தொற்று பரவவும் அதிக வாய்ப்பு உள்ளது. அவற்றை தடுக்க, கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நாளை (ஜன., 4) வரை, தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE