பெங்களூரு:
கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த பெங்களூரு மாநகராட்சி கமிஷனர், மஞ்சுநாத் பிரசாத், வார்டு கமிட்டி கூட்டத்துக்கு வர முடியாத நிலையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத்துக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, வீட்டில் தனிமையில் உள்ளார்.பெங்களூரு, வசந்த்நகர் வார்டில், நேற்று நடந்த வார்டு கமிட்டி கூட்டத்தில், வீட்டில் இருந்தபடியே, வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் பங்கேற்றார்.அப்போது அவர், 'வசந்த் நகர் வார்டில், நிலுவையில் உள்ள அபிவிருத்தி பணிகள், குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் முடிக்க வேண்டும். பொது மக்களின் பிரச்னைகளை அதிகாரிகள் விரைவில் தீர்க்க வேண்டும்' என்றார்.இந்த வேளையில், நபர் ஒருவர், 'வசந்த் நகரின் வெவ்வேறு பகுதிகளில் பலரும் சிறுநீர் கழிக்கின்றனர். அந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்' என கோரினார்.இதற்கு பதிலளித்த கமிஷனர், 'சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக அந்த பகுதிகளை பார்வையிட்டு, சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 'பொது கழிப்பிடம் கட்ட இடம் தேர்வு செய்ய வேண்டும்,' என அறிவுறுத்தினார்.மற்றொரு நபர் பேசுகையில், 'அரண்மனை சாலையில் போடப்பட்ட தார் சரியில்லை. வசந்த் நகரின் 7, 16வது தெருக்களில் தார் போட வேண்டும்' என்றார்.உடனடியாக தார் போட, ஏற்பாடு செய்யும்படி, அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE