பொது செய்தி

தமிழ்நாடு

கிழக்கு, மேற்கு மாவட்ட காங்., தலைவர்கள் மாற்றம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட, காங்., தலைவராக, ஷேக்நவீத் இருந்து வந்தார். திடீரென அவர் மாற்றப்பட்டு, புதிய தலைவராக, நாமக்கல்லை சேர்ந்த சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மேற்கு மாவட்ட தலைவராக இருந்த தனகோபாலும் மாற்றப்பட்டு, புதிய தலைவராக, திருச்செங்கோட்டை சேர்ந்த செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாமக்கல் நகர தலைவராக பணியாற்றி வந்த

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட, காங்., தலைவராக, ஷேக்நவீத் இருந்து வந்தார். திடீரென அவர் மாற்றப்பட்டு, புதிய தலைவராக, நாமக்கல்லை சேர்ந்த சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மேற்கு மாவட்ட தலைவராக இருந்த தனகோபாலும் மாற்றப்பட்டு, புதிய தலைவராக, திருச்செங்கோட்டை சேர்ந்த செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாமக்கல் நகர தலைவராக பணியாற்றி வந்த ராம்குமார், தன் பதவியை ராஜினாமா செய்வதாக, மாநில தலைவர் அழகிரிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தன் சொந்த பணிச்சுமை காரணமாக, நகர தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மோகனூர் வட்டார தலைவர் நடராஜனும், தன் பதவியை ராஜினாமா செய்வதாக, மாநில தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மாவட்ட தலைவர் மாற்றப்பட்டுள்ள நிலையில், நகர, வட்டார தலைவர்கள் ராஜினமா செய்துள்ளது, அக்கட்சியில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X