ராம்நகர்:
''பள்ளி, கல்லுாரிகளில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணிக்க, மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழு அமைக்கப்படும்,'' என தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.கர்நாடகாவில், நேற்று முன்தினம், எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., இரண்டாம் ஆண்டு வகுப்புகள் திறக்கப்பட்டன.கொரோனா தொற்று பயத்தால், பெரும்பாலான பெற்றோர், தங்களின் பிள்ளைகளை பள்ளி, கல்லுாரிகளுக்கு அனுப்பவில்லை.மேலும், பல பள்ளி, கல்லுாரிகளில் சுகாதார துறையின் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ் குமார், ராம்நகரில் நேற்று கூறியதாவது:மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. சில பள்ளிகளில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என்ற புகார் வந்துள்ளன.எனவே, விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மாவட்டம் வாரியாக, மூன்று முதல் நான்கு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.இக்குழுவினர் தினமும் பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று கொரோனா விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்வர்.எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகள் குறித்து, மூன்று நான்கு நாட்களில், தற்காலிக தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.பழைய பாஸ்கள் வைத்து, பஸ்களில் பயணிக்க மாணவர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பஸ் நடத்துனர்கள், தேவையின்றி மாணவர்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது.தனியார் பள்ளி ஆசிரியர்கள் பிரச்னை குறித்து, பெற்றோர் சங்கத்துடன் ஆலோசித்து, கல்வி கட்டணம் குறித்து முடிவு செய்யப்படும். உடன்பாடு எட்டாத போது, அரசு சார்பில் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE