பொது செய்தி

இந்தியா

ராமர் கோவில் : நிதி சேகரிப்பதற்காக, கமிட்டி

Added : ஜன 03, 2021
Share
Advertisement
பெங்களூரு: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, கர்நாடகாவில், நிதி சேகரிப்பதற்காக, கமிட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இந்த கோவில் கட்ட, நிதி சேகரிப்பதற்காக, 'ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ேஷத்ரா அறக்கட்டளை' அமைக்கப்பட்டுள்ளது.இதன், கர்நாடகா நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், பெங்களூரு, சாம்ராஜ்நகர்

பெங்களூரு:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, கர்நாடகாவில், நிதி சேகரிப்பதற்காக, கமிட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இந்த கோவில் கட்ட, நிதி சேகரிப்பதற்காக, 'ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ேஷத்ரா அறக்கட்டளை' அமைக்கப்பட்டுள்ளது.இதன், கர்நாடகா நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், பெங்களூரு, சாம்ராஜ்நகர் சேவா பாரதி பள்ளி தலைவர், வெங்கடராமு, மாநில பிரிவு தலைவராகவும்;கித்வாய் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் ஓய்வு பெற்ற இயக்குனர் விஜயலட்சுமி தேசமானே, பெலகாவி ராணிசென்னம்மா பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற துணை வேந்தர் மீனா சந்தாவர்கர் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும்;கர்நாடகா வனவாசி கல்யாண ஆஸ்ரமத்தின் முக்கியஸ்தரான திப்பேசாமி செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, கர்நாடக மாநில ஓய்வு பெற்ற தலைமை செயலர் ரத்னபிரபா, சிருங்கேரி சாரதா பீடத்தின் நிர்வாக அதிகாரி கவுரிசங்கர், ஹுப்பள்ளியை சேர்ந்த தொழிலதிபர் பத்மஸ்ரீ விஜய்சங்கேஸ்வர்,கைவாரா சியோகி நாராயணா மடத்தின் தர்மாதிகாரி ஜெயராம், ஹுப்பள்ளி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.,தேவேந்திரப்பா மாலகி உட்பட, 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X