பெங்களூரு: மதிய உணவு சமைப்பாளர்களுக்கு, 93.45 கோடி ரூபாய், நான்கு மாதங்களுக்கான கவுரவ நிதி நேற்று வழங்கப்பட்டன.
கர்நாடகா அரசு பள்ளிகளில், மதிய உணவு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்க, உணவு சமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு, கடந்தாண்டு செப்., முதல், கவுரவ நிதி வழங்கப்படவில்லை. அவர்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்பட்டது. இது குறித்து போராட்டம் நடத்துவதாக, அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கான, 93.45 கோடி ரூபாய் கவுரவ நிதி நேற்று வழங்கப்பட்டது.
மதிய உணவு சமைப்பாளர்களின் வங்கி கணக்கிற்கு, நேரடியாக செலுத்தப்பட்டது. மேலும், 2021 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்குரிய கவுரவ நிதி, குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும், என தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ் குமார், கல்வி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE