கட்சியை பலப்படுதத காங்கிரஸ் ஆலோசனை

Added : ஜன 03, 2021
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடகாவில் தொடர்ந்து, வெவ்வேறு தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ், வரும், 6 முதல், 18 வரை, மாநிலம் முழுவதும் மண்டல வாரியாக கட்சியை பலப்படுத்தும் வகையில், முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.கர்நாடகாவில் லோக்சபா, சட்டசபை, கிராம பஞ்சாயத்து தேர்தல்களில், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது.இதனால் கட்சியை பலப்படுத்த,

பெங்களூரு:கர்நாடகாவில் தொடர்ந்து, வெவ்வேறு தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ், வரும், 6 முதல், 18 வரை, மாநிலம் முழுவதும் மண்டல வாரியாக கட்சியை பலப்படுத்தும் வகையில், முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கர்நாடகாவில் லோக்சபா, சட்டசபை, கிராம பஞ்சாயத்து தேர்தல்களில், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது.இதனால் கட்சியை பலப்படுத்த, அக்கட்சியின் மாநில தலைவர் சிவகுமார் திட்டமிட்டுள்ளார். பூத் அளவிலிருந்து மாநிலம் வரை கட்சியை பலப்படுத்தி, அடுத்து வரும் தேர்தல்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.இதற்காக, வரும், 6 முதல், 18 வரை மண்டல வாரியாக ஆலோசனை கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஷிவமொகா, மைசூரு, தட்சிண கன்னடா உட்பட்ட மண்டலங்களுக்கு சேர்ந்த பிரமுகர்களுடன், பன்ட்வாலில் உள்ள சாகர் அரங்கில், வரும், 6லும்;மாண்டியா, பெங்களூரு மண்டலங்களுக்கு உட்பட்ட பிரமுகர்களுடன், பெங்களூரு நகரின் ஆர்.வி. கல்லுாரியின் பூர்ணிமா பேலஸ் அரங்கில், வரும், 8லும்;தாவணகரே, பெலகாவி ஹுப்பள்ளி - தார்வாட் மண்டல பிரமுகர்களுடன், ஹுப்பள்ளியிலுள்ள காட்டன் கவுன்டி சொகுசு விடுதியில், வரும், 11லும்;கலபுரகி மண்டல பிரமுகர்களுடன், கலபுரகி கட்சி அலுவலகத்தில, வரும், 18லும் சிறப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, காங்கிரஸ் மாநில தலைவர் சிவகுமார், பெங்களூரில் நேற்று கூறியதாவது :கட்சியை பூத் மட்டத்திலிருந்து பலப்படுத்தி, அடுத்து வரவுள்ள தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்கள், லோக்சபா, சட்டசபை தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேலவை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல், செயல் தலைவர்கள் ஈஸ்வர் கன்ட்ரே, சலிம் அகமது.சதீஷ் ஜார்கிஹோளி, மாநில செயற்குழு உறுப்பினர்கள், தேசிய நிர்வாகிகள், மூத்த பிரமுகர்கள் மட்டும் பங்கேற்கின்றனர். மேலும், உள்ளூர் நிர்வாகத்தை அறிந்து ஆலோசனை வழங்க, பிளாக் காங்கிரஸ் தலைவர்கள், கடந்த தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள், எம்.எல்.ஏ., எம்.எல்.சி., க்கள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X