அரசியல் செய்தி

தமிழ்நாடு

கல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் பேச்சு

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021 | கருத்துகள் (84)
Share
Advertisement
ஈரோடு: திமுக ஆட்சிக்கு வந்ததும், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடக்கவில்லை. இதனால், தான் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள்
திமுக, தி.மு.க., ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், திமுகதலைவர்ஸ்டாலின், கல்விக்கடன்

ஈரோடு: திமுக ஆட்சிக்கு வந்ததும், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடக்கவில்லை. இதனால், தான் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தி வருகிறோம். லோக்சபா தேர்தலில் 38 இடங்களை வென்று, லோக்சபாவில் 3வது பெரிய கட்சியாக திமுக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிகாரத்தையும் தாண்டி திமுக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். கடந்த தேர்தலில் 1.1 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் பழனிசாமி.


latest tamil newsடில்லியில் 38 நாள் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அதிமுக அரசும் கண்முடித்தனமாக ஆதரவு தெரிவிக்கிறது. மினி கிளினிக்குகள் துவங்கியது மக்களை ஏமாற்றும் திட்டம். ஆட்சியில் இல்லாத நேரத்திலேயே மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்தது திமுக.திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணி நாட்களை 150 நாட்களாக உயர்த்தவும், அன்றைய கூலியை அன்றே வழங்கவும் திமுக பரிசீலித்து வருகிறது. மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். முதியவர்கள் உதவித்தொகை கட்சியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-202104:19:01 IST Report Abuse
J.V. Iyer போகிற போக்கை பார்த்தால், எல்லா வீட்டு தலைவர்களுக்கும் வாரம் ஒரு பாட்டில், குழந்தைகளுக்கு பரீட்சை இல்லாத பாஸ், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஒரு புடவை, வாரம் ஒரு சினிமா பாஸ், திமுக காரர்களுக்கு சாலையில் மறியல் செய்ய அனுமதி, அவர்களுக்கு இலவச சிக்கன் பிரியாணி, பங்களா தேஷ் மக்களுக்கு இலவச குடியுரிமை, என்று பட்டியல் நீளும் என்று தெரிகிறது. தமிழ் நாட்டை குட்டிச்சுவராக்க சுடலைஜி புறப்பட்டுவிட்டார். கபர்தார்
Rate this:
Cancel
Truth Triumph - Coimbatore,இந்தியா
03-ஜன-202122:50:07 IST Report Abuse
Truth Triumph இந்த நாட்டில் இன்னும் என்ன கேவலப்பட இருக்கு இவனுக இந்தமாதிரி பொய் சொல்லி பாராளுமன்ற தேர்தலில் மக்களை ஏமாத்தினானுக ... இவனுங்களுக்கு பின்னால இன்னுமும் வாயப்பொளந்து திரையீர கூட்டம் மானம் கெட்டவங்க .... இன்னும் கேவலப்பட இந்த முறையும் காசு வாங்கிட்டு வாக்களிக்க பலர் இருப்பானுங்க ... என்ன பீலா விட்டாலும் கேப்பாங்க ... மூடர்கூட்டம் ....
Rate this:
Cancel
03-ஜன-202121:41:46 IST Report Abuse
theruvasagan அப்படியே தமிழகம் உலக வங்கியிலிருந்து வாங்கின கடனையும் தள்ளுபடி பண்ணிடடா தமிழ் நாட்டை கடனேயில்லாத நிதி மிகை மாநிலமா ஆக்கிடலாம் அப்படீன்னு அடிச்சு வுடுங்க. நீட்தேர்வு ரத்து வேளாண் சட்டம் ரத்து எட்டுவழிச்சாலை திட்டம் ரத்து கல்விக்கடன் ரத்து இதல்லாம் கூட நீங்க ரத்து பண்ணிவிடுவீங்க என்று நம்புற மூளைச் சலவை செய்யப்பட்ட மூடர் கூட்டம் எதச் சொன்னாலும் நம்பும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X