கரீந்தியா: 650 அடி உயர மலை உச்சியில் காதலை வெளிப்படுத்தும்போது காதலர்கள் மேலிருந்து தவறி விழுந்தனர். இதில் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆஸ்திரியா நாட்டின் கரீந்தியா நகரில் 27 வயதுடை ஒருவர், தனது 32 வயதுடைய காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்த எண்ணியுள்ளார். வித்தியாசமான முறையில் காதலை உணர்த்துவதற்காக அங்குள்ள பால்கெர்ட் என்ற மலை உச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். 650 அடி உயர மலை உச்சியில் நிற்க வைத்து தன் காதலியிடம் கூறியபோது, காதலி துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது, மலையில் இருந்து காதலி தவறி விழுந்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அவரது காதலர், தனது காதலியை காப்பாற்ற அவரை பிடிக்க முயற்சி செய்கையில் அவரும் தவறி விழுந்துள்ளார். இதில் காதலி, கீழே படர்ந்திருந்த அடர்ந்த பனிக்கட்டிகள் மீது விழுந்தார். அசைவுற்று கிடந்த பெண்ணை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து தகவல் தெரிவித்ததால் அவருக்கு உரிய சிகிச்சையளித்து உயிருடன் மீட்டனர். காதலர், மலையில் இருந்து 50 அடி ஆழத்தில் இருந்த மலை முகட்டில் சிக்கியிருந்தார். காதலர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு அவருக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE