கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி: காங்., கேள்வி

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: பாரத் பயோடெக் மற்றும் சீரம் மருந்து நிறுவனமும் இந்தியாவில் 3வது கட்ட மருத்துவ பரிசோதனையை முடிக்காத போது, எப்படி இரு நிறுவனங்களின் மருந்துகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது: இதுவரை எந்த நாடும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனையை முடித்து, தரவுகளை
congress, corona, coronavirus, anandsharma, vaccine,

புதுடில்லி: பாரத் பயோடெக் மற்றும் சீரம் மருந்து நிறுவனமும் இந்தியாவில் 3வது கட்ட மருத்துவ பரிசோதனையை முடிக்காத போது, எப்படி இரு நிறுவனங்களின் மருந்துகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது: இதுவரை எந்த நாடும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனையை முடித்து, தரவுகளை ஆய்வு செய்து அனுமதி வழங்கவில்லை. இதனால், கொரோனா வைரஸ், தடுப்பு மருந்துகளும் அனுமதி வழங்கும் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்த இரு நிறுவனங்களும் தங்களின் 3வது கட்ட மருத்துவ பரிசோதனையை நிறைவு செய்யவில்லை. அந்த நிறுவனங்களின் மருந்துகளின் பாதுகாப்பு அம்சம், திறன் ஆகியவையும் மறு ஆய்வு செய்யப்படவில்லை.


latest tamil news
ஆனால், இவை இரண்டும் கட்டாயமாகும். இரு மருந்துகளுக்கும் னுமதி வழங்கிய விவகாரத்தில், கட்டாய நெறிமுறைகளையும், தேவைகளையும் உறுதி செய்ய வலுவான காரணங்களை சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுவது அவசியம். இரு கொரோனா தடுப்பு மருந்துகளும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கும் போது, அவசர காலத்துக்கு மட்டும் மருந்துகளை பயன்படுத்த அளித்த அனுமதி பல்வேறு உடல்நலம் சார்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Krishnan - chennai,இந்தியா
04-ஜன-202113:33:13 IST Report Abuse
G.Krishnan காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் இந்த தடுப்பு ஊசியை போட்டுக்கொள்ள வேண்டாம்..... 3வது கட்ட மருத்துவ பரிசோதனை மற்றும்....30வது கட்ட மருத்துவ பரிசோதனைகூட முடிந்து யாராவது உயிருடன் இருந்தால் நீங்கள் போட்டுக் கொள்ளவும்.... எதிர் கட்சி என்பதற்காக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது......பின்னர் ஏதாவது தவறு ஏற்பட்டால்......அதுதான் முன்னாலேயே காங்கிரஸ் கட்சி எச்சரித்தது என்று மலிவான அரசியல் செய்வதற்காக.....இவர்கள் பேசுவதை ஏர்த்துக்கொள்ள முடியாது.... இப்பவே இந்த கட்சி இருக்கிறதா என்று பார்க்க வேண்டிய நிலைமை.... இப்படியே பேசிக்கொண்டிருந்தால் "மைகிராஸ்கோப்" வைத்து உங்கள் கட்சியை தேட வேண்டிவரும் . . . . .ஜாக்கிரதையாக இருங்கள்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-202104:27:57 IST Report Abuse
J.V. Iyer கேள்வி கேட்கும் உரிமை பாப்பு ராகுல்ஜிக்கு மட்டுமே உள்ளது. அவர்தான் நேரு குடும்பத்தின் இளவரசர். அவர் குதூகலிக்க தாய்லாந்து சென்றுள்ளார். என்ன செய்ய.
Rate this:
Cancel
Ananda Ayyappan Jaguva Vasudevan PhD - Durham, NC,யூ.எஸ்.ஏ
04-ஜன-202103:12:11 IST Report Abuse
Ananda Ayyappan Jaguva Vasudevan PhD I don't care about this or any other political partyz but I back his question. Where is the data? Not even a single peer-reviewed article published on the efficacy and the side effects of this formulation. How can you not follow a protocol the whole world does? We need a cure or more health related problem? How do we know this work but not ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X