அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினால் முதல்வராக முடியாது : அழகிரி

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021 | கருத்துகள் (67)
Share
Advertisement
மதுரை:ஸ்டாலினால் முதல்வராக முடியாது என மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் கூறினார்.மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அழகிரி கூறியதாவது: கருணாநிதியிடம் இல்லாததையும் பொல்லாததையும் கூறி என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். என்றுமே பதவியை எதிர்பார்த்து திமுகவில்இருந்தது இல்லை. எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின்

மதுரை:ஸ்டாலினால் முதல்வராக முடியாது என மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் கூறினார்.



latest tamil news



மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அழகிரி கூறியதாவது: கருணாநிதியிடம் இல்லாததையும் பொல்லாததையும் கூறி என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். என்றுமே பதவியை எதிர்பார்த்து திமுகவில்இருந்தது இல்லை. எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான். மதுரை நமது கோட்டை. அதையாராலும் மாற்ற முடியாது. கருணாநிதியின் உழைப்பு தான் திருமங்கலம் தேர்தலின் வெற்றிக்கு காரணம்.


latest tamil news




திருமங்கலம் இடைதேர்தல்


திருமங்கலம் தேர்தல் என்றாலே இந்தியாவே பயப்படுகிறது. திருமங்கலம் பார்முலா என்பது எங்களின் உழைப்பு .திருமங்கலம் இடை தேர்தல் பார்முலா என்கிறார்கள் அப்படியொரு பார்முலா கிடையாது. திருமங்கலம் இடை தேர்தலில் யார் ஒருவருக்கும் பணம் கொடுக்கவில்லை.

திருமங்கலம் தேர்தல் வெற்றிக்கு காரணம் பணம் அல்ல. எங்களின் உழைப்புதான் காரணம். திருமங்கலம் தேர்தலில் வேலை பார்க்குமாறு ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர். திருமங்கலம் தேர்தலில் ஜெயிக்க தவறி இருந்தால் தி.மு.க ஆட்சியே அப்போது கையை விட்டு போய் இருக்கும். இப்போதும்நான் உங்களில் ஒருவன்.


latest tamil news




அனைவரும் நடித்தனர்



மத்திய அமைச்சர் பதவி தேவையில்லை என்றேன் கருணாநிதி தான் எனக்கு கொடுத்தார்.தென் மண்டல அமைப்புச் செயலாளர் ஆன பிறகு திமுகவினர் அனைவரும் நடித்தனர். ஸ்டாலினுக்குதிமுக பொருளாளர் பதவி, துணை முதல்வர் பதிவியை கருணாநிதியிடம் பெற்று தந்தது நான்தான்.கருணாநிதிக்கு பின்னர் நீதான் திமுக தலைவர் என ஸ்டாலினிடம் தெரிவித்தவன் நான். ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை. பொய் சொல்லவே எனக்கு தெரியாது. எப்போதும் உண்மையே பேசுவேன். நான் என்ன தவறு செய்தேன் .
ஏன் என்னை திமுகவில் இருந்து நீக்கினீர்கள்.திமுகவை பல இடங்களில் வெற்றிபெறச்செய்தேன் இது துரோகமா? எத்தனையோ பேரை அமைச்சர்களாக ஆக்கி உள்ளேன்.ஒருவருக்கும் நன்றி இல்லை. உங்களுக்காக உழைக்க ஒரு தொண்டன் இருக்கிறான் என்றால் அது நான்தான்.


latest tamil news





ஸ்டாலினால் முதல்வராக முடியாது



ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக வர முடியாது.என் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள் வருங்கால முதல்வரே என போஸ்டர்கள் ஒட்டப்பட்டாலும் அவரால் முதல்வராக நிச்சயமாக முடியாது. நான் முதல்வராக ஆசைப்படவில்லை.ஸ்டாலினுக்கு கூட வருங்கால முதல்வரே வருக என போஸ்டர் அடிக்கிறார்கள் .பிறந்த நாளுக்காக பொதுக்குழுவே வருக என கட்சியினர் போஸ்டர் அடித்ததில் என்ன தவறு?


கருணாநிதியை மறந்து விட்டனர்



உடல் நிலை சரியில்லாத கருணாநிதியை கட்டாயப் படுத்தி திருவாரூரில் போட்டியிடசெய்தனர் .கருணாநிதியை மறந்து விட்டு இப்போது திமுகவை நடத்துகின்றனர்.அவருடன் ஒப்பிட்டு ஒரு சிலர் ஸ்டாலினை பேசுகி்ன்றனர். கருணாநிதிக்கு நிகர் அவரே தான். கருணாநிதிக்கு இருக்கும் ஞானம் யாருக்கு இருக்கிறது. அவரை ஸ்டாலின் மிஞ்சி விட்டார் என சிலர் பேசுகின்றனர். கருணாநிதியை மீண்டும் நாம்தான் நினைவுபடுத்த வேண்டும். அவர் நம் உயிர்.


நல்ல முடிவு எடுப்பேன்



நிச்சயம் விரைவில் நல்ல முடிவு எடுப்பேன் நான் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.


பத்திரிகையாளர்களுக்கு அழகிரி வேண்டுகோள்


பத்திரிகையாளர்கள் அனைவரும் திருத்தி எழுதாமல்உண்மையை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
07-ஜன-202113:22:10 IST Report Abuse
Malick Raja இது ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் அருள்வாக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும் .. ஆனால் மாறாகவே நடக்கும் .. அப்போதெல்லாம் வெளிவராது .. தேர்தலுக்கு முன் வெளியே .. தேர்தலுக்கு பின் உள்ளே .இதுதான் இதன்னுடைய மரபாக இருக்கிறது . சுற்றிலும் தினக்கூலிகள் அப்பப்ப மட்டும் வருவதற்கும் ஏற்பட்டுடன் இருக்கும் இது ஒரு வகை அது என்பதே சரியாக இருக்கும்
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
04-ஜன-202112:43:17 IST Report Abuse
Indian  Ravichandran அண்ணா நாங்கள் உங்கள் பக்கம்.
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
04-ஜன-202106:12:44 IST Report Abuse
அறவோன் //நான் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.// சங்கம் ஏவிவிட்ட கெய்க்வாட் சொன்னதும் இதேதான் ‼️‼️‼️
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X