சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்வறட்சி அபாயம்உலகில் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை அழிக்கப்படுகிறது. விவசாய நிலங்கள் அனைத்தும் விளைநிலங்களாக மாற்றப்படுகிறது. மக்கள்தொகை பெருக்கத்தில் கட்டடங்கள் பெருகுகின்றன. இதனால் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக 2040ம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு பேர் வசிக்கும் இருப்பிடம் வறட்சியை சந்திக்கும்

அறிவியல் ஆயிரம்
வறட்சி அபாயம்

உலகில் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை அழிக்கப்படுகிறது. விவசாய நிலங்கள் அனைத்தும் விளைநிலங்களாக மாற்றப்படுகிறது. மக்கள்தொகை பெருக்கத்தில் கட்டடங்கள் பெருகுகின்றன. இதனால் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக 2040ம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு பேர் வசிக்கும் இருப்பிடம் வறட்சியை சந்திக்கும் என ஸ்பெயின் ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் 34 நாடுகளில் 200 இடங்களில் நிலத்தடி நீர் தொடர்பாக நடத்திய ஆய்வின் படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்
உலக பிரெய்லி தினம்
பார்வையற்றோர் விரல்களால் தடவிப்பார்த்து படிக்க ஏற்ற 'பிரெய்லி' எழுத்து முறையை உருவாக்கிய லுாயி பிரெய்லியின் பிறந்த தினமான ஜன.,4 உலக பிரெய்லி தினமாக 2019 முதல் கடைபிடிக்கப்படுகிறது. இவர் 1809 ஜன.,4ல் பிரான்சில் பிறந்தார். மூன்று வயதில் தையல் ஊசி கண்ணில் குத்தியதால் பார்வையை இழந்தார். கல்வி கற்க விரும்பிய இவர், பார்வையற்றோருக்கான வாலன்டின் ஹேய் எழுத்து முறை கடினமாக இருந்ததால், தானே ஒன்று முதல் ஆறு புடைப்பு புள்ளிகளை கொண்டு எழுதும் புதிய முறையை உருவாக்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X