அழகிரி கட்சி ஆரம்பிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் டி.கே .புரத்தில் அளித்த பேட்டியில் கூறினார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட (டி.கேபுரம்) தண்டலம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிராக மூன்று மசோதாக்களை எதிர்த்து கேரளா தீர்மானம் இயற்றி உள்ளது குறித்து கேட்டதற்க்குஇதே போல் தமிழக அரசு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று திமுக தலைவர் அறிக்கை கொடுத்துள்ளார்.
ஆட்சியில் இருப்பவர்களுக்கு சொந்த புத்தி இல்லை, இதன் பின்பாவது தீர்மானம் இயற்ற வேண்டும்.திமுக கூட்டணியில் உள்ள கடசிகள் தனி சின்னம் கேட்பதில் தவறில்லை காரணம் எல்லா கட்சிகளுக்கும் தனி கொள்கை இருக்கின்றது இதனால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை அழகிரி புதிய கட்சி ஆரம்பிப்பது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினார்.
தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றால் கண்டிப்பாக திமுக அதை எதிர்க்கும்.
தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றால் வீணான பிரச்சினைகள் ஏற்படும்.

தேர்தல் முடிந்த இடத்தில் இடத்திலிருந்து முடியாத இடத்திற்குச் சென்று தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் .இதுவரை தமிழத்தில் ஒரே கட்டமாகதான் நடந்துள்ளது.இதை கண்டிப்பாக திமுக எதிர்க்கும்.
அமைச்சர் ஜெயக்குமார் திமுக நடத்துவது மக்கள் சபையா குண்டர் சபையா கேட்டுள்ளார். ஜெயக்குமார் தான் குண்டாக உள்ளார் என கிண்டல் அடித்தார் துரைமுருகன்.
அழகிரி புதிய கட்சி ஆரம்பிப்பது குறித்த கேள்விக்கு இதுபோன்ற கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE